twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விடைபெற்றார் நடிகர் விவேக்.. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்!

    |

    சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் புகழ் உடல் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    Recommended Video

    நடிகர் விவேக் இன்று காலமானார் | Actor Vivek

    நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

    நடிகர் விவேக் காலமானார்.. சொல்ல முடியாத் துயர்.. பேரதிர்ச்சி.. திரை பிரபலங்கள் கண்ணீர்!நடிகர் விவேக் காலமானார்.. சொல்ல முடியாத் துயர்.. பேரதிர்ச்சி.. திரை பிரபலங்கள் கண்ணீர்!

    விருகம்பாக்கம் வீட்டில்

    விருகம்பாக்கம் வீட்டில்

    இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மேட்டுக்குப்பம் மின் மயானம்

    மேட்டுக்குப்பம் மின் மயானம்

    அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

    காவல்துறை மரியாதையுடன்

    காவல்துறை மரியாதையுடன்

    ஆனால் மூன்றரை மணிக்கே விவேக்கின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து நடிகர் விவேக்கின் பூத உடல் ஊர்வலமாக மேட்டுகுப்பம் மின் மயானத்திற்கு ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கொண்டு செல்லப்பட்டது.

    78 குண்டுகள் முழங்க

    78 குண்டுகள் முழங்க

    பின்னர் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி, இறுதிச்சடங்குகளை செய்தார்.

    பாலச்சந்தர் மூலம்

    பாலச்சந்தர் மூலம்

    நடிகர் விவேக் 1961ஆம் ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பை ஊரணி கிராமத்தில் பிறந்தார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    சின்னக்கலைவாணர்..

    சின்னக்கலைவாணர்..

    இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். சமூக சீர்திருத்த கருத்துக்களை தனது நகைச்சுவையில் வெளிப்படுத்தி வந்த நடிகர் விவேக், சின்னக்கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.

    தாராள பிரபு

    தாராள பிரபு

    நடிகர் விவேக்கின் கலைப்பயண சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. விவேக்கின் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு தாராள பிரபு படம் வெளியானது. இந்தப் படத்தில் விவேக் மருத்துவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vivekh is no more. Vivekh's last rites will be held today evening by 5pm it seems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X