சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விவேக் கோலிவுட்டில் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய காமெடியில் பகுத்தறிவு கருத்துக்களையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் விவேக். மேலும் மரக்கன்றுகளையும் நட்டார். சூழல் இப்படி இருக்க அவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பாகும்.

விவேக் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நகைச்சுவை நடிகர். டிகிரி முடித்துவிட்டு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா மீது எப்போதும் தீராத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஒருபக்கம் வேலையை பார்த்துக்கொண்டு மறுபக்கம் சினிமா வாய்ப்பையும் விடாமல் தேடிக்கொண்டிருந்தார். தீவிரமாக முயற்சிப்பவர்களை சினிமா எப்போதும் கைவிடாது என்ற விதி விவேக்குக்கும் எழுதப்பட்டிருந்தது.

Vivek s elder daughter Tejaswini s wedding took place in Chennai yesterday

மனதில் உறுதி வேண்டும்: தீவிர தேடுதலுக்கு பிறகு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார் விவேக். முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்த கனமான கதாபாத்திரத்தை எந்த சுமையும் இல்லாமல் அல்லது சுமையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மிகச்சிறப்பாக நடித்து முடித்தார். இதனால் கே.பாலசந்தரின் குட் புக்கிலும் இடம் பிடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள்: முதல் படத்தின் வெற்றி, விவேக்கின் சிறந்த நடிப்பை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தே அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது. கே.பாலசந்தர் 1989ஆம் ஆண்டு இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் மீண்டும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்க ஆரம்பித்தன.

முன்னணி நகைச்சுவை நடிகர்: ஒருகட்டத்தில் விவேக் படு பிஸியாக மாறினார். ஒரே வருடத்தில் 8லிருந்து 10 படங்கள்வரை நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இடை இடையே அவருக்கு போட்டியாக கருதப்பட்ட நடிகர் வடிவேலுவுடன் இணைந்தும் நடித்து அசத்தினார். வடிவேலுவின் பாணி தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது; விவேக்கின் பாணி தனது நகைச்சுவையில் சமூக கருத்துக்கள், முற்போக்கு கருத்துக்கள் போன்றவைகளை வைப்பது. அதனாலேயே விவேக்கின் காமெடி ஸ்டைல் அதிகம் ரசிக்கப்பட்டது.

ஸ்டைல்: அதேபோல் விவேக் ஹீரோ உருவம் கொண்ட காமெடி நடிகர். தன்னுடைய ஒவ்வொரு காமெடியிலும் தனது தனித்துவமான ஸ்டைலால் அப்ளாஸை அள்ளிவிடுபவர். உதாரணமாக மின்னலே படத்தில் மாதவனுடன் ஒரு காட்சியில் விவேக் தன்னுடைய வாயில் சிகரெட்டை தூக்கிப்போடுவதை பார்த்தால் யார் ஹீரோ என்ற குழப்பம் ஏற்படும். அந்த அளவுக்கு விவேக்கின் ஸ்டைல் இருக்கும். தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விவேக் குடும்பம்: விவேக்குக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தார். இவர்களில் மகன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்தச் சூழலில் விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினியின் திருமணம் நேற்று சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர் சிரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். அதேசமயம் நேற்று முன் தினம் நடந்த திருமண வரவேற்பில் பிரபலங்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றும், மூலிகைச் செடிகளும் வழங்கப்பட்டன. ஏற்கனவே விவேக் உயிரோடு இருந்தபோது இந்த மண்ணின் நன்மைக்காக ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் செயலை தொடங்கி தொடர்ந்து செய்துவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தேஜஸ்வினியின் திருமணத்தில் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X