மெர்சலைத் தொடர்ந்து சர்க்காரிலும் ஆளப்போறான் தமிழன்... இணைந்த பாடலாசிரியர்!

பாடலாசிரியர் விவேக் சர்க்கார் படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

சென்னை: விஜய் நடிக்கும் சர்க்கார் திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் திரைப்படங்களுக்கு பிறகு விஜய்க்காக ஏஆர்.ரகுமான் நான்காவது முறையாக இசையமைக்கும் திரைப்படம் சர்க்கார். ஏஆர்.முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Viveks penning lyrics for Sarkar!

ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் தமிழர்களின் தேசிய கீதமாக ஒலித்து மெர்சல் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு நடிகர் விஜய்யையும் புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்தது.

இந்த நிலையில் அதிரடியாக தயாராகிக்கொண்டிருக்கும் விஜய்யின் சர்க்கார் திரைப்படத்திற்கு மீண்டும் ஆளப்போறான் தமிழன் பாடல் கூட்டணி அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் எல்லா பாடல்களையும் எழுதுகிறார்.

பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் ஆளப்போறான் தமிழன் போலவே உணர்வுப்பூர்வமான பாடலை எழுதிவருகிறாராம். எப்போதுமே ஒரு பட பாடலிலிருந்து அடுத்த படத்தின் பாடல்கள் இன்னும் சிறப்பாக வரவேண்டுமென புதுமைகளை புகுத்தி கடுமையாக உழைப்பவர் ஏஆர்.ரகுமான்.

அதனால் மெர்சலில் ஆளப்போறான் பாடலைவிட மிகச்சிறப்பான ஒரு பாடலாக இந்தப் பாடல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏ.ஆர்.ரகுமான் விஜய் படத்திற்காக மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயம். முருகதாஸ் திரைப்படத்தில் பணியாற்றுவதை சிறப்பாக உணர்கிறேன். என சொல்லியிருக்கும் விவேக், இந்த வாய்ப்பை கொடுத்த, ஏஆர்.முருகதாஸ், விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X