'நொடித் தூக்கம் இல்லை.. என் ரத்தம் உறிஞ்சப்படுகிறது..' - 'விழித்திரு' இயக்குநர் உருக்கமான பதிவு

By Vignesh Selvaraj

சென்னை : 'அவள் பெயர் தமிழரசி' படத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கிய 'விழித்திரு' படத்தில் தன்ஷிகா, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு எனப் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் டி.ஆர் ஒரு பாடலைப் பாடி அதற்கு ஆடியிருக்கிறார். நடிகை தன்ஷிகா இந்தப் படத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகையாக நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

Vizhithiru director meera kathiravan's facebook post

திட்டமிட்டபடி இந்தப் படம் இன்று தியேட்டர்களில் வெளியாக வில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

"கடந்த இரண்டு நாட்களாக நொடி உறக்கம் இல்லை.தற்போதும் ஜெமினி லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன். துரோகத்தின் வல்லமை யால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன்.

நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப் போகும் ஆதரவில் இருக்கிறது. நண்பர்களும் மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சிரமங்களுக்கு மன்னிக்கவும்... 'விழித்திரு' திரையரங்குகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது... ஆதரியுங்கள்!" என அவர் பதிவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X