பஞ்சாயத்தான படத்தின் குத்துப் பாடல் - டி.ஆர், தன்ஷிகாவின் 'பப்பரப்பா' ரிலீஸ்!
சென்னை : விதார்த், தன்ஷிகா, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் 'விழித்திரு' படத்தில் டி.ஆர், சங்கீதா ஆகியோர் ஆடும் 'பப்பரப்பா' குத்துப் பாடலின் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
விழித்திரு படத்தின் பிரஸ்மீட்டின்போது நடிகை தன்ஷிகாவை டி.ராஜேந்தர் திட்டி, அழவைத்தது அப்போது பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது. திரையுலகினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த சூழலில், அது படத்தின் ப்ரொமோஷனுக்காக எனவும் கூறப்பட்டது.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.
டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா, அல்ஃபோன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள் இந்த 'விழித்திரு' படத்தில் ஆறு பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
இப்படத்தில் தம்பி ராமையா, எஸ்.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் பலரும் நடித்து உள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











