விஜே அபிநயாவுக்கு திடீரென என்ன ஆச்சு?.. இன்ஸ்டாகிராம் பக்கமே வரமாட்டேன்னு வீடியோ போட்டிருக்காரே?

சென்னை: பீரோ அக்கா என இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் திடீரென பிரபலமான விஜே அபிநயா இன்னும் ஓராண்டு இன்ஸ்டாகிராம் பக்கமே வரமாட்டேன் என ஷாக் கொடுக்கும் வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏன் ஒரு வருஷம் மட்டும், அப்படியே ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராம் பக்கமே வராம போயிடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அழகான பெண்கள் கூட ஆபாசமாக வீடியோக்களை போட்டால் தான் இப்போதெல்லாம் பார்க்கின்றனர் என்கிற தவறான பாதையில் தொடர்ந்து ஆபாச கமெண்ட்டுகளை படித்துக் காட்டி அதற்கு விளக்கம் கொடுப்பது போல வீடியோ வெளியிட்டு வருகிறார் விஜே அபிநயா.

VJ Abhinaya feels so bad and ready to quit instagram for 1 year due to followers reaction
Photo Credit:

இவர் மட்டுமில்லை, இதையே இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக மாற புதிய தொழில் என பல இளம் பெண்கள் களமிறங்கிய நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸை கூட ஹெட் செட் போடாமல் கேட்க முடியவில்லை. போட்டாலும், காதில் இருந்து ரத்தம் தான் வருகிறது.

ஏகப்பட்ட மீரா மிதுன்: சில ஆண்டுகளுக்கு முன்னதாக மீரா மிதுன் தான் இப்படியெல்லாம் சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசுவது, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவது என அத்துமீறி சென்றார். ஆனால், தற்போது அவர் ஆள் அட்ரஸே தெரியாமல் போய்விட்டார். அவருக்கு பதில் தற்போது ஏகப்பட்ட இளம் பெண்கள் மீரா மிதுனை மிஞ்சும் அளவுக்கு படு ஆபாசமாக பேசுவதும், கமெண்ட் செக்‌ஷனில் கமெண்ட்டுகளை படித்துக் காட்டி விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு தங்களை தாங்களே டேமேஜ் செய்துக் கொள்கின்றனர்.

விஜே அபிநயா: தனது பின்னழகை காட்டி இதில், சதை தான் உள்ளது பாருங்க, தகர சவுண்ட் ஏதும் கேட்கவில்லை என தனக்கு பீரோ அக்கா என பெயர் வைத்த நெட்டிசன்களுக்கு பதில் சொல்வது போல இவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் விஜே அபிநயாவாக இருந்த இவரை பலரும் பீரோ அக்கா என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஏற்றவாறு படுமோசமான வீடியோக்களையும் இவர் வெளியிட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புரமோஷன் வீடியோ ஒன்று அவருக்கு பெரும் பேக் ஃபயர் ஆகிவிட்டது.

ரிப்போர்ட் அடிக்குறாங்க: மற்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் செய்வது போலத்தானே நானும் ஒரு புரமோஷனல் வீடியோ வெளியிட்டேன். அதற்கு போய் பலரும் என்னை ரிப்போர்ட் அடிக்கிறீங்க. ரிப்போர்ட் அடிச்சு என் ஐடியை காலி பண்ணிட்டா நீங்க சந்தோஷமா வாழ்ந்துடுவீங்களா, பிடிச்சா பாருங்க, இல்லைன்னா ஸ்கிப் பண்ணிட்டு போயிடுங்க, உங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இனிமேல், ஒரு வருஷத்துக்கு இன்ஸ்டாகிராம் பக்கமே வரமாட்டேன். என் வாழ்க்கை எப்படிப்பட்டது, நான் எப்படி கஷ்டப்பட்டு வாழுகிறேன், இதில் கிடைக்கும் பணத்தில் தான் என்னோட லைஃப்பே ஓடுது என ரொம்பவே உருக்கமாக பேசியுள்ளார் விஜே அபிநயா.

கலாய்க்கும் ஃபேன்ஸ்: அப்படி கஷ்டப்பட்டு எல்லாம் நீங்க இன்ஸ்டாகிராம் பக்கம் வரவே வேண்டாம் என்றும் ஒரு வருஷம் மட்டுமில்லை, அப்படியே ஓடிப் போய் வேறு ஏதாவது நல்ல வேலையில சேர்ந்து சம்பாதிக்கிற வழிய பாருங்க என்றும் இதெல்லாம் ஒரு பொழப்பா என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரை கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X