விஜே ஆனந்த கண்ணன் கடைசி சாட்.. ரசிகர்களுடன் எமோஷனல் பேச்சு.. தீயாய் பரவும் கடைசி வீடியோ!
சென்னை: விஜே ஆனந்த கண்ணன் மறைவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்களுடனான கடைசி வீடியோ உரையாடல் வைரலாகி வருகிறது.
சன் மியூஸிக் சேனல் தொடங்கப்பட்ட காலத்தில் அதில் பிரபல ஆர்ஜேவாக பணியாற்றியவர் விஜே ஆனந்த கண்ணன். 90ஸ் கிட் மற்றும் 2000 ஆம் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவாக இருந்தார்.
சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன், எப்போதும் சிரித்த முகத்துடனும் நகைச்சுவையாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனாலேயே பெரும் ரசிகர் பட்டபாளத்தை கொண்டிருந்தார் ஆனந்த கண்ணன்.

தொகுப்பாளர்.. நடிகர்.. ஆர் ஜே..
தமிழகத்தில் சன் மியூஸிக் சேனல் மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் ஆனந்த கண்ணன். ரேடியோக்களில் ஆர்ஜேவாகவும் பணியாற்றிய ஆனந்த கண்ணன், சிந்து பாத், விக்ரமாதித்தன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் கலாசாரம் சார்ந்த
30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களை ஈர்த்தவர் ஆனந்த கண்ணன். AK Theatres எனும் கலை அமைப்பை நிறுவி
தமிழ் கலாசாரம் சார்ந்த கிராமியக் கலைகளை பயிலரங்குகளையும் ஆனந்த கண்ணன் நடத்தி வந்தார்.

இளம் வயதிலேயே திருமணம்
கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஆனந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட ஆனந்த கண்ணனுக்கு ஒரு பெண் குழந்தையும் ராணி என்ற மனைவியும் உள்ளனர்.

மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல்
ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் ஆவார். ஆனந்த கண்ணன் மரணமடைந்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து இரங்கல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆனந்த கண்ணனின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்
இந்நிலையில் டிவிட்டரில் #RIPanandakannan என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. இதனிடையே ஆனந்த கண்ணன் தனது ரசிகர்களுடன் கடைசியாக உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ட்ரேட் மார்க் புன்னகையுடன்
அதில் தன்னிடம் பேசும் ரசிகர்களிடம் தனது ட்ரேட் மார்க் புன்னகையுடன் சிரித்த முகமாக பேசுகிறார் ஆனந்த கண்ணன். மேலும் தங்களது நாடகக் குழு மற்றும் நாடகம் குறித்தும் பேசியுள்ளார் ஆனந்த கண்ணன். மேலும் நவராத்திரி ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் குறித்தும் பேசியுள்ள ஆனந்த கண்ணன்.

ஆனந்த கண்ணனின் கடைசி வீடியோ
தன்னை பார்த்ததும் ரசிகர்கள், ஹாய், ஹலோக, வணக்கம் என சொல்லி பேசுவது மகிழ்ச்சியளிப்பதாக உருக்கமாக கூறியுள்ளார். லைவ்வில் வந்த தனது நண்பர்களுடனும் ஹேப்பியாக பேசியுள்ளார் ஆனந்த கண்ணன். ஆனந்த கண்ணனின் இந்த கடைசி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











