Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாத்தி கம்மிங் பாடலுக்கு இறங்கி குத்திய வி.ஜே அஞ்சனா..வைரல் வீடியோ!
சென்னை : சின்னத்திரையில் பிரபலமான வி.ஜே அஞ்சனா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
விதார்த்தின் 25வது படத்தின் டைட்டில் இதுதான்.. கான்செப்ட் அதுக்கும் மேல.. என்னன்னு பாருங்க!
இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
பல நிகழ்ச்சிகள்
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன்டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
கயல் சந்திரன்
பின்னர் 2016ம் ஆண்டு கயல் பட கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்தார். தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மிஸ் சின்னத்திரை
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என கூறிவிட்டார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருது வழங்கப்பட்டது. இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.
அசத்தலான நடனம்
அஞ்சனா அவ்வபோது வொர்க் அவுட் வீடியோ, கணவருடன் இருக்கும் புகைப்படம், நடன வீடியோ என பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மாஸ்டர் படத்தில் அனைவரையும் ஆடவைத்த வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது தோழியுடன் அசத்தலாக நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.