அவர் ரொம்பவும் பணிவாகதான் கூறினார்... அல்லு அர்ஜுனுக்கு பரிந்து பேசி ஊடகத்தை விளாசிய விஜே அஞ்சனா!
சென்னை: புஷ்பா சக்ஸஸ் மீட்டில் நடந்த ஒன்மில்லாத ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கிய ஊடகத்தை விஜே அஞ்சனா விளாசியுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் புஷ்பா. செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த 17 ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

புஷ்பா சக்ஸஸ் மீட்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு சக்ஸஸ் மீட் வைத்து கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார், பாடகர்கள் செந்தில், ராஜ லக்ஷ்மி ஆகியோர் பங்கேற்றனர்

விசிலடித்த விஜே அஞ்சனா
இந்த நிகழ்ச்சியை விஜே அஞ்சனா தொகுத்து வழங்கினார். சக்ஸஸ் மீட்டில் சரளமாக தமிழில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தின் டயலாக்கை பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது விஜே அஞ்சனா ரசிகர்கள் சார்பாக அல்லு அர்ஜூனுக்கு விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மறுத்த அல்லு அர்ஜூன்
தொடர்ந்து பேசிய அஞ்சனா அல்லு அர்ஜூனை நடனமாடும் படி கூறினார். இரண்டு ஸ்டெப் போட்டால் போதும் என கேட்டார் அஞ்சனா. ஆனால் நேரம் இல்லை என மறுத்த அல்லு அர்ஜூன் அவரது கை விரல்களை பிடித்து இல்லை முடியாது என்பதை போல் தலையை அசைத்துவிட்டு சென்றார்.

ஊடகங்கள் வெளியிட்ட செய்தி
இதனை சில மீடியாக்கள் அல்லு அர்ஜூனிடம் விஜே அஞ்சனா கேட்ட கேள்வியால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அஞ்சனாவின் கையை தட்டிவிட்டு மேடையில் இருந்து வெளியேறியதாகவும் செய்திகள் வெளியிட்டன. மேலும் அல்லு அர்ஜூனின் அந்த வீடியோவும் ஷேர் செய்யப்பட்டது.
Recommended Video

கவனத்தை ஈர்த்துக்கொள்ளுங்கள்
இதனை பார்த்த அஞ்சனா, அந்த செய்தியை மேற்கோள் காட்டி நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டடிருப்பதாவது, ஏற்கனவே நேரம் கடந்துவிட்டது. மேலும் ஈவன்ட்டும் முடிந்துவிட்டது. நாங்கள் அவரை நடனமாடுமாறு கேட்டோம். அவர் நேர நெறிமுறைகளை மனதில் வைத்து புன்னகையுடன் மிகவும் பணிவாக மறுத்தார். அவ்வளவு எளிமையாக கூறினார்.. இப்போது.. இந்த ட்வீட்டை எடுத்து செய்தியாக்கி இன்னும் கொஞ்சம் கவனத்தை ஈர்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











