மீண்டும் தொகுப்பாளராக வலம் வரும் விஜே அஞ்சனா.. இப்ப எந்த சேனல்?
சென்னை : பிரபல சன் தொலைகாட்சியின் தொகுப்பாளர் விஜே அஞ்சனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பெரும்பாலான சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், முன்னணி தொகுப்பாளராக சிறந்து விளங்கியவர்கள் அஞ்சனாவும் மணிமேகலையும் கிட்டதட்ட ஒரே சாயலில் இருப்பதால் சன் மியூசிக்கின் ஆரம்ப காலங்களில் பல ரசிகர்களுக்கு யார் மணிமேகலை யார் அஞ்சனா என்று தெரியாமல் குழம்பி விடுவார்கள். இதனால் பல நேரங்களில் மணிமேகலையும் அஞ்சனாவும் ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களை குழப்பி விளையாடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு விஜே அஞ்சனாவுக்கும் நடிகர் கயல் சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது அஞ்சனாவுக்கு குழந்தை இருக்கிறது . கல்யாணத்திற்கு பிறகு சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விலகிய அஞ்சனா குடும்ப வாழ்கையில் பிஸியாக இருந்தார் .

இதனால் சில வருடங்களாக இவரை பொது மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் மற்ற தொலைகாட்சியின் தொகுப்பாளராகவும் பார்க்க முடியவில்லை. தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து உள்ளார் அஞ்சனா . தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் என இரண்டு முன்னணி தொலைக்காட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விஜே அஞ்சனா .

Recommended Video
இது குறித்து பல பேட்டிகளில் பேசிய விஜே அஞ்சனா மீண்டும் தொகுப்பாளராக செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதை நான் தொடர்ந்து செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். இது மட்டுமின்றி பல திரைப்படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் அஞ்சனா,



Click it and Unblock the Notifications











