For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகாஸ், உங்க சந்தேகம் சரியாப் போச்சு: வி.ஜே. அஞ்சனா கர்ப்பமாம்!

    By Siva
    |
    லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாக அஞ்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா கர்ப்பமாக இருக்கிறாராம்.

    சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் வி.ஜே.வாக இருந்தவர் அஞ்சனா. அங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றிய அவர் கடந்த ஜனவரி மாதம் சேனலில் இருந்து வெளியேறினார்.

    அஞ்சனா சன் மியூசிக்கில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    சந்தேகம்

    சந்தேகம்

    தனக்கு ஒரு குட்டி பிரேக் தேவைப்படுவதால் சன் மியூசிக்கில் இருந்து விலகியதாக தெரிவித்தார் அஞ்சனா. அவர் கர்ப்பமாகியிருப்பார் அதனால் தான் பிரேக் எடுக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

    அஞ்சனா

    அஞ்சனா

    ரசிகர்கள் சந்தேகப்பட்டது தான் நடந்துள்ளது. அஞ்சனா கர்ப்பமாக உள்ளாராம். கணவர் கயல் சந்திரனின் ஆடை வடிவமைப்பாளராக உள்ள அஞ்சனாவை மீண்டும் சன் மியூசிக்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    கயல் சந்திரன்

    அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் திருமணமாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அஞ்சனா.

    பிரபலங்கள்

    இன்று இரண்டாவது திருமண நாள் கொண்டாடும் அஞ்சனா, கயல் சந்திரனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    English summary
    Popular VJ Anjana is pregnant. Anjana recently quit her job from Sun Music citing personal reasons. Anajana and her actor husband Kayal Chandran are celebrating their second wedding anniversary today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X