நூடுல்ஸ் மண்டை..குட்டி பனியன்… ஆளே மாறிப்போன அஞ்சனா!
சென்னை : சின்னத்திரையில் பிரபலமான வி.ஜே அஞ்சனா மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

பிரபலமானார்
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன்டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சி
பின்னர் 2016ம் ஆண்டு கயல் பட கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்தார். தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சினிமா வாய்ப்பை மறுத்தார்
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என கூறிவிட்டார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருது வழங்கப்பட்டது. இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

வைரல் போட்டோஸ்
அஞ்சனா அவ்வபோது வர்கவுட் வீடியோ, கணவருடன் இருக்கும் புகைப்படம், நடன வீடியோ என பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் நூடுல்ஸ் மண்டையுடன் மார்டனாக உடை அடைந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து 'என்ன அஞ்சனா கலக்குறீங்க' என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











