VJ அஞ்சனா கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா? எக்ஸ் (X) தளத்தில் வெடித்த சர்ச்சை - ஆவேசமான பதில்!

சின்னத்திரை உலகில் தனது வசீகரப் பேச்சால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருப்பவர் தொகுப்பாளர் அஞ்சனா ரங்கன். சன் மியூசிக் காலத்தில் தொடங்கி இன்று வரை முன்னணித் திரை விழாக்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளின் தவிர்க்க முடியாத முகமாக அவர் விளங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள அஞ்சனா, எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.

சமீபத்தில் நடிகர் சந்திரனுடனான அவரது திருமணம் குறித்துத் தேவையில்லாத வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு அவர் காட்டிய அதிரடி எதிர்வினை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

VJ Anjana Rangan Breaks Silence on Divorce Rumors with Actor Chandran Viral Response Exposed

காதல் திருமணம் மற்றும் வதந்திகள்:

அஞ்சனா கடந்த 2016-ம் ஆண்டு 'கயல்' பட புகழ் நடிகர் சந்திரனை நீண்ட நாள் காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வப்போது தங்களது மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து வருவது வழக்கம். ஆனால், சமீபகாலமாகத் திரைப்பிரபலங்களின் விவாகரத்துச் செய்திகள் அதிகரித்து வரும் நிலையில், அஞ்சனா - சந்திரன் தம்பதியினரையும் வதந்திகள் விட்டுவைக்கவில்லை.

எக்ஸ் (X) தளத்தில் பரவிய அந்தப் பதிவு:

திடீரென எக்ஸ் (X) தளத்தில் மர்ம நபர் ஒருவர், "அஞ்சனா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார்" என எந்தவித ஆதாரமுமின்றி ஒரு பதிவைப் போட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து, நேரடியாக அஞ்சனாவையே டேக் (Tag) செய்து கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். இது அஞ்சனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

அஞ்சனாவின் அதிரடி ரியாக்‌ஷன்:

பொறுமையிழந்த அஞ்சனா, "எவனோ ஒருத்தன் எதையோ போஸ்ட் போட்டா, உடனே என்னை டேக் பண்ணிட்டு வந்துடுவீங்களா?" என மிகக் காட்டமாகப் பதிலளித்தார். இதன் மூலம் தங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லை என்பதையும், பரப்பப்படுவது வெறும் வதந்தி என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை நீக்கிய அவர், "மிகுந்த கோபத்தில் அப்படிப் பதிவிட்டுவிட்டேன்" என விளக்கம் அளித்து மற்றொரு பதிவைப் போட்டார். வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவர் காட்டிய இந்த ஆவேசம் தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X