என் பொற்காலம் நீ… கணவரை கட்டி அணைத்து கொஞ்சும் வி.ஜே அஞ்சனா !
சென்னை : சின்னத்திரையில் பிரபலமான வி.ஜே அஞ்சனா கணவரை கொஞ்சும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

நிகழ்ச்சிகள்
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன்டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

மிஸ் சின்னத்திரை
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என கூறிவிட்டார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருது வழங்கப்பட்டது. இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

கயல் சந்திரன்
பின்னர் 2016ம் ஆண்டு கயல் பட கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்தார். தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

என் சூரிய ஒளி
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தனது கணவருடன் பொழுதை கழித்து வரும் விஜே அஞ்சனா. சமூகவலைத்தள பக்கத்தில் எதாவது பதிவிடுவதை வழங்கமாக கொண்டுள்ளார். தனது கணவருடன் நெருங்கி அன்பைப்பொழியும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் என் பொற்காலம், என் சூரிய ஒளியுடன் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











