பழசை மறக்காத அர்ச்சனா? சிறு வயதில் என்னம்மா க்யூட்டா இருக்காங்கனு நீங்களே பாருங்க!
சென்னை : சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனா தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
தொகுப்பாளினி அர்ச்சனா தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ், விஜய் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளில் இவர் தடம் பதித்துள்ளார்.
ஆர்ஜேவாக தனது பயணத்தை தொடங்கிய அர்ச்சனா இன்று நடிகையாக பலவித திறமைகளுடன் மாஸ் காட்டி வருகிறார்.

தொகுப்பாளினி அர்சசனா
தமிழில் தொலைக்காட்சிகளில் முன்னணித் தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அர்ச்சனா. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல ஜீ தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மீண்டும் தனது பயணத்தை இறங்கினார்.

அன்பு தான் எல்லாம்...அன்பு ஜெயிக்கும்
இதையடுத்து, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அன்பு தான் எல்லாம்... அன்பு ஜெயிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

செல்ல மகள் சாரா
சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அர்ச்சனா இருந்த போது அவரது ரசிகர்கள் பதறிப்போய் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகள் செய்தனர். இதில் இருந்து மீண்ட அர்ச்சனா சில மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். அர்ச்சனாவின் மகள் சாராவும் சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவது, ரீல் வீடியோவை பகிர்வது என ஆக்டிவாகவே உள்ளார்.

டாக்டர் படத்தில்
அர்ச்சனா அவரது மகள் சாரா இருவரும் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அம்மா, மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான ரோலில் சாரா நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது.

அச்சும்மாவா இது
இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது சகோதரியின் பிறந்த நாளையொட்டி, இருவரின் த்ரோ பேக் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவையில் அர்ச்சனாவும் அவரது தங்கை அனிதாவும் செம க்யூட்டாக இருக்கிறார்கள். மேலும், அர்ச்சனா அடிக்கடி தனது தங்கைவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் அட நம்ம அச்சும்மாவா இது என கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











