வாவ்.. பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவு.. புதிய போட்டியாளர் என்ட்ரி.. இனிமே வேற லெவல்ல இருக்கப்போகுது!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளர் என்ட்ரியாவது முதல் புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 8 ஆண் போட்டியாளர்கள் 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே படு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களின் உண்மை முகமும் கிழியத் தொடங்கியுள்ளது.

புதிய போட்டியாளர்
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரியாக ஒரு போட்டியாளர் உள்ளே நுழைந்திருக்கிறார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த அர்ச்சனாதான் அது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் முதலே இதில் பங்கேற்க தீவிரமாக முயற்சித்தார் அர்ச்சனா. ஆனால் கடைசி நேரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏற்பட்ட காண்ட்ராக்ட் பிரச்சனை காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

ரசிகர்கள் ஏமாற்றம்
போட்டியாளர் அறிமுக நிகழ்ச்சியின் போதும் கூட ஸ்டேஜ் வரை அர்ச்சனா வந்ததாகவும் ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சி சட்ட வல்லுநர்கள் கடைசி நேரத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக அர்ச்சனா பங்கேற்க முடியாமல் போனது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

குவாரண்டைன்
இந்நிலையில் ஜீ தமிழ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய, அர்ச்சனா சட்ட சிக்கல்களையெல்லாம் சரி செய்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒருவாரமாக ஹோம் குவாரண்டைனில் இருந்த அர்ச்சனா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

எல்லாம் ஓகே வா?
கெத்தாக உள்ளே நுழைகிறார் அர்ச்சனா. அவரை பார்த்ததும் ஹவுஸ்மேட்டுகள் கட்டிப்பிடித்து வரவேற்பு கொடுக்கின்றனர். அப்போது எல்லாம் ஓகேவா என கேட்கிறார் சனம். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்கிறார் அர்ச்சனா. நீங்கதான் வர்றீங்கன்னு எனக்கு தெரியும் என்கிறார் சுரேஷ்.

களைக்கட்ட போகிறது
அதற்கு சிவாஜி படத்தில் வரும் எம்ஜிஆர் ரஜினி ஸ்டைலில், தலையில் கையை வைத்து மொட்டை தி பாஸ் என மறைமுகமாக கூறுகிறார். அர்ச்சனாவின் என்ட்ரியை பார்த்த நெட்டிசன்கள் இனிமே தான் களைக்கட்ட போகிறது என கலாய்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











