டர்ராக்கிய அர்ச்சனா.. ஒவ்வொருத்தருக்கும் ஒருபட்டம்.. செம காண்டில் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த வேகத்தில் போட்டியாளர்களுக்கு பட்டத்தை கொடுத்து டர்ராக்கியுள்ளார் அர்ச்சனா.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார் விஜே அர்ச்சனா. அவர் உள்ளே நுழைந்தது முதலே செம அட்டகாசம் செய்தார்.

குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை செம வாரு வாரினார். அவருக்கு ஆரத்தி எடுப்பதும் புகழ்வதும் என வீட்டையே அல்லோகளப்படுத்தினார்.

ஆளுக்கொரு பட்டம்

ஆளுக்கொரு பட்டம்

வெளியில் எல்லாம் ஓகே வா என சனம் கேட்ட போதே இன்னும் சொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்றார். அதன்பிறகு ஆளுக்கொரு பட்டம் கொடுத்து கழுத்தில் ஒரு போர்டை மாட்டி மொத்தப் பேரையும் அன்லிமிட்டெடாக பங்கம் பண்ணினார் அர்ச்சனா.

சவலான போட்டியாளர்

சவலான போட்டியாளர்

அதன்படி பாலாஜி முருகதாஸை முதல் ஆளாக அழைக்கும் அர்ச்சனா, நோ கமெண்ட்ஸ், சிம்பிளி வேஸ்ட் என்று கூறி பாலா இது உங்களுக்கு என அந்த பட்டத்தை பாலாவின் கழுத்தில் மாட்டி விட்டார். அடுத்து சவாலான போட்டியாளர் என விஜய் டிவி புராடெக்ட்டுகளான ரம்யா பாண்டியனுக்கும் ரியோவுக்கும் பட்டம் கொடுத்தார்.

நிஷாவுக்கு ஆமா சாமி

நிஷாவுக்கு ஆமா சாமி

அதனை தொடர்ந்து ஷோகேஸ் பொம்மை என்ற பட்டத்தை சம்யுக்தாவுக்கும் சோமசேகருக்கு கொடுத்தார். அடுத்து அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தை ஷிவானியையும் வேல்முருகனையும் அழைத்து கழுத்தில் மாட்டிவிட்டார் அர்ச்சனா. ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவுக்கு ஆமா சாமி பட்டத்தை கொடுத்தார்.

நமத்துப்போன பட்டாசு

நமத்துப்போன பட்டாசு

காணவில்லை என்ற பட்டத்தை ஆஜித், கேப்ரியல்லாவுக்கும் கொடுத்தார். சனம் ஷெட்டி மற்றும் நடிகர் ஆரிக்கு நமத்து போன பட்டாசு என்ற பட்டத்தை கொடுத்து வெறுப்பேற்றினார். மேலும் சனம் ஷெட்டியை நமத்துப் போன பட்டாசு எப்படியிருக்கும் என்பதை போல கிண்டல் செய்து கொடுத்தார்.

விவாதிக்கப்படும் நபர்கள்

விவாதிக்கப்படும் நபர்கள்

தொடர்ந்து பிக்பாஸ் 4 டிரெண்டிங் என்ற பட்டதை சண்டைக் கோழிகளான அனிதாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் கொடுத்தார் அர்ச்சனா. மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபர்கள், மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் நபர்கள் என்று கூறி கொடுத்தார் அர்ச்சனா.

ஹவுஸ்மேட்ஸ் அதிருப்தி

ஹவுஸ்மேட்ஸ் அதிருப்தி

உங்களை பற்றி வெளியில் இருக்கும் கண்ணோட்டம் இதுதான் என்று கூறி பட்டங்களை வழங்கினார் அர்ச்சனா. அர்ச்சனா கொடுத்த இந்த வித்தியாசமனா பட்டங்களால் போட்டியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக ஆரி, ஷிவானி, கேப்ரியல்லா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை பார்த்து அதிருப்தியடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X