சிம்பிளி வேஸ்ட்.. மொத்தபேரையும் அசிங்கப்படுத்திய அர்ச்சனா.. பத்தவச்ச பிக்பாஸ்.. கிர்ரான ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு பட்டத்தை கொடுத்து அசிங்கப்படுத்தியுள்ளார் அர்ச்சனா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக இன்று உள்ளே நுழைந்துள்ளார் விஜே அர்ச்சனா. அவர் உள்ளே நுழைந்தது முதல் புரமோவில் காட்டப்பட்டது.
இரண்டாவது புரமோவில் விஜே அர்ச்சனா ஹவுஸ் மேட்ஸ்களுடன் சேர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்தார்.

வச்சு செய்த அர்ச்சனா
இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் மொத்தப் பேரையும் அன்லிமிட்டெடாக அசிங்கப்படுத்தியுள்ளார் அர்ச்சனா. அதாவது ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டத்தை கழுத்தில் மாட்டி விட்டு வேற லெவலில் வச்சு செய்திருக்கிறார்.

பாலா சிம்பிளி வேஸ்ட்
அதன்படி பாலாஜியை முதல் அழைக்கும் அர்ச்சனா, நோ கமெண்ட்ஸ், சிம்பிளி வேஸ்ட் என்று கூறி பாலா இது உங்களுக்கு என அந்த பட்டத்தை பாலாவின் கழுத்தில் மாட்டி விடுகிறார். அடுத்து அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தை ஷிவானியை அழைத்து அவரது கழுத்தில் மாட்டுகிறார்.

கண்டுக்காத ஷிவானி
ஆனால் போய் உட்காந்த வேகத்தில் நீ என்ன போடுறது.. நான் என்ன மாட்றது என அதனை கழட்டி கையில் வைத்து கொள்கிறார் ஷிவானி. நீங்க இப்படி இருக்கக்கூடாது அப்படிங்றதுக்காகதான் இதை உங்களுக்கு கொடுக்கிறேன் என விளக்கம் கொடுக்கிறார் அர்ச்சனா. ஆனால் அதனை கண்டுகொள்ளவில்லை ஷிவானி.

காணவில்லை
அடுத்து பிக்பாஸ் 4 டிரெண்டிங் என்ற பட்டத்தை கொடுக்கும் அர்ச்சனா, எல்லோரும் இதை பாஸிட்டிவ் என நினைப்பீர்கள்.. ஆனால் இல்லை என்கிறார். அது அனிதாவுக்குதான் செல்வதாக தெரிகிறது. மேலும் ஆஜித் மற்றும் கேப்ரியல்லாவுக்கு காணவில்லை என்ற பட்டத்தை மாட்டிவிட்டுள்ளார்.

நமத்துப் போன பட்டாசு
ரம்யா பாண்டியனுக்கு சவாலான போட்டியாளர் என்று பட்டத்தை கொடுத்துள்ள அர்ச்சனா, சனம் ஷெட்டியை நமத்துப் போன பட்டாசு எனக்கூறி மேமேஜ் செய்கிறார். ஒவ்வொருவருக்கும் பட்டத்தை கொடுக்கும் போது அவர்களின் முகம் டெரராக மாறுகிறது.

சுரேஷ் சக்கரவர்த்திக்கு?
இதில் ஆமா சாமி என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் சுரேஷ் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்படும் பட்டம் குறித்த தகவல் எதுவும் இல்லை. பார்க்கும் போதே பகீர் கிளப்பும் இந்த புரமோ இன்றைய நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











