அடடா.. கடைசி வரைக்கும் போராடியும் அவங்களால கலந்துக்க முடியலயே.. வைல்ட் கார்டா வர வாய்ப்பிருக்காம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்க போராயும் விஜே அர்ச்சனாவால் பங்கேற்க முடியாமல் போனது அவரது ரசிகர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil போட்டியாளர்களுக்கு No Smoking Room, No Bedroom | Day 1 Review

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று தொடங்கிது. பார்வையாளர்கள் யாருமின்றி வழக்கமான சுவாரசியங்கள் சற்று குறைந்தே இருந்தது.

போட்டியாளர்களை ஆரத் தழுவி வரவேற்று வீட்டிற்குள் அனுப்பி வைக்கும் கமல்ஹாசன், இம்முறை கொரோனா அச்சத்தால், கிட்டயே நெருங்கவிடாமல் சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தார்.

16 போட்டியாளர்கள்

16 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள் குறித்து பல உத்தேச பட்டியல்கள் வெளியான நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 8 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 8 பெண் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், ஆரி, கேப்ரில்லா, சோம சேகர், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, சுரேஷ், ஆஜித் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இரண்டு முறை வந்து

இரண்டு முறை வந்து

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜே அர்ச்சனா கடைசி வரை பங்கேற்க முடியாமல் போனது. இரண்டு முறை பிக்பாஸ் வீடு வரை வந்த அவருக்கு வீட்டிற்குள் செல்லும் பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது.

ஜீ தமிழ் சேனல்

ஜீ தமிழ் சேனல்

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தனது தொகுப்பாளர் கேரியரை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அர்ச்சனா.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல விஜேவாக பல நிகழ்ச்சிகளை சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆசைப்பட்ட அர்ச்சனா

ஆசைப்பட்ட அர்ச்சனா

அர்ச்சனா தனது மகளுடன் சேர்ந்தும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்டார் அர்ச்சனா. அதற்கான புரசியூட்ஜர்களை செய்து முடித்தார்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் பணிபுரியும் ஜீ தமிழ் நிறுவனம் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. கடந்த திங்கள் கிழமையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஓபனிங்குக்காக போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அசையவில்லை ஜீ தமிழ்

அசையவில்லை ஜீ தமிழ்

அதில் பர்ஃபாமன்ஸ் கொடுத்த இருந்தார் அர்ச்சனா. அப்போது ஜீ தமிழில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் பர்ஃபாமன்ஸ் செய்யாமலேயே வெளியேறினார். எப்படியாவது பேசி சமாளித்துவிட்டு வந்துவிடலாம் என்று எண்ணினார். ஆனால் அதற்கெல்லாம் அசையவில்லை நிர்வாகம்.

அறிமுக நிகழ்ச்சி வரை

அறிமுக நிகழ்ச்சி வரை

இந்நிலையில் நிர்வாகத்தை எதிர்த்துக் கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியாளர் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார் அர்ச்சனா. பின்னாலேயே வந்த ஜீ தமிழின் சட்ட வல்லுநர்கள், பிக்பாஸில் பங்கேற்றால் ஜீ தமிழுடனான ஒப்பந்தப்படி சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

முடிந்தவரை அவர்களுடன் போராடி பார்த்துள்ளார் அர்ச்சனா. ஆனால் ஒப்பந்தப்படி பணிகளை முடித்து விட்டு போகும்படி நிர்வாகத் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் நொந்துப் போன அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்காமலே இருந்து விட்டார். கடைசி வரை அவர் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதுவும் சந்தேகம் தான்

அதுவும் சந்தேகம் தான்

இருந்த போதும் வைல்டு கார்டு என்ட்ரியாக அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதுவும் சந்தேகம்தான் என்றும் ஒரு புறம் தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியே ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியாச்சு அடுத்த 105 நாட்களுக்கு செம என்டெர்டெயின்மென்ட்தான் என்கின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X