twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘’எவன் அவன்’’ ஒருமையில் கேட்ட விஜே அர்ச்சனா.. காண்டான சுரேஷ் சக்கரவர்த்தி !

    |

    சென்னை : பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி 2 வது வாரத்தை நெருங்கும் நிலையில் இப்பொழுது புதிய வரவாக விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.

    வரும்போதே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒரு பக்கா ப்ளானோடு வந்திருக்கும் அர்ச்சனாவை பார்த்த பலரும் ஜர்க்காகி நின்றனர்.

    இதையடுத்து ஏற்கனவே சக போட்டியாளர்களிடம் மல்லு கட்டிக் கொண்டிருந்த சுரேஷை காண்டாக்கும் வகையில் பேசி ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறார் விஜே அர்ச்சனா.

    முதல் முறையாக கோவப்பட்ட ஆஜித்... ரணகளமாகும் பிக் பாஸ் ஹவுஸ்!முதல் முறையாக கோவப்பட்ட ஆஜித்... ரணகளமாகும் பிக் பாஸ் ஹவுஸ்!

    நாளுக்கு நாள் சுவாரசியத்தை

    நாளுக்கு நாள் சுவாரசியத்தை

    பிக் பாஸ் சீசன் 4 ஏற்கனவே 16 போட்டியாளர்களை கொண்டிருக்கும் நிலையில் தினம்தோறும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் போட்டியாளர்களிடம் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ பார்வையாளர்களிடம் நாளுக்கு நாள் சுவாரசியத்தை ஏற்றிக் கொண்டே செல்கிறது.

    அவர்களும் எஸ்கேப்

    அவர்களும் எஸ்கேப்

    மேலும் குடுவையில் பந்து போடும் விளையாட்டில் சனம் மற்றும் வேல்முருகன் டீம் வெற்றி பெற இப்பொழுது இந்த வார ஏவிக்ஷனிலிருந்து அவர்களும் எஸ்கேப் ஆகி. பாதுகாப்பான கட்டத்திற்கு சென்று விட்டனர்.

    ரசிகர்களின் டார்கெட்டாக

    ரசிகர்களின் டார்கெட்டாக

    பிக் பாஸ் ரசிகர்களின் டார்கெட்டாக இருந்த சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் செட்டி ஆகியோர் இப்பொழுது ஏவிக்ஷனில் இருந்து தப்பித்து இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்பதை அறிய பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    17வது போட்டியாளராக

    17வது போட்டியாளராக

    இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோவில் பிரபல தொகுப்பாளினி விஜே அர்ச்சனா 17வது போட்டியாளராக குதூகலமாக வீட்டுக்குள் நுழைய பிக் பாஸ் வீடு களைகட்டியது.

    சுரேஷ் செம காண்டாகி

    சுரேஷ் செம காண்டாகி

    இந்நிலையில் அர்ச்சனா வந்தவுடனேயே சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுக்கும் வகையில் சுரேஷின் சமையல் யாருக்கெல்லாம் பிடிக்காது என கேட்க அதற்க்கு ரியோ அவரிடம் சமையல் மட்டும் தான் பிடிக்கும் என உள்குத்து வைத்து சொல்ல, அதற்க்கு அர்ச்சனா "எவன் அவன் " என ஒருமையில் கேட்க அதில் டென்ஷனான சுரேஷ் செம காண்டாகி எடுத்த எடுப்பிலேயே "அத சொன்னவன கேக்கணும்" என்றவாறு பாத்ரூமுக்கு செல்கிறார்.

    வெய்டிங்கில் உள்ளனர்

    வெய்டிங்கில் உள்ளனர்

    இந்த ப்ரோமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இருக்கு இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என ஆவலுடன் இன்றைய எபிசோடை பார்க்க தீவிரமாக வெய்டிங்கில் உள்ளனர்.

    English summary
    VJ Archana to get into a fight with Suresh Chakravarthy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X