அடேங்கப்பா.. இந்த பிரபல விஜேவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களாம்.. அப்போ இந்த சீசன் களை கட்டும்!

சென்னை: இன்னும் கொஞ்சம் நாள் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகிறது.

இறுதி நேரத்தில் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில், உடனடியாக அந்த பிரபல விஜேவை விஜய் டிவி களமிறக்கி உள்ளதாக தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

நிச்சயம் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 4

அக்டோபர் 4

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்ஃபார்ம் பண்ண போட்டியாளர்களை குவாரண்டைன் செய்து வருகிறது பிக் பாஸ் குழு. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த போட்டியாளர்களை தனியாக ஹோட்டல்களில் பாதுகாப்பு படுத்தி வருகின்றனர்.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

இந்த சீசனில் மக்களின் மனங்களை வெல்லப் போகும் அந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் என கசியும் பெயர்கள் அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

வழக்கமான 16 போட்டியாளர்களுக்கு பதிலாக இந்த முறை 12 முதல் 14 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும், 100 நாட்களுக்கு பதிலாக 80 நாட்களாக நிகழ்ச்சியை குறைக்கவும் பிக் பாஸ் குழு முடிவு செய்து வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கன்ஃபார்ம் லிஸ்ட்

கன்ஃபார்ம் லிஸ்ட்

நடிகை கிரண், ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், ஷிவானி, சூப்பர் சிங்கர் அஜித், கேப்ரில்லா, அனு மோகன், ஜித்தன் ரமேஷ், ஷனம் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டு குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இருவர் வெளியேற்றப்பட்டதால், மேலும், சில பிரபலங்களை பிக் பாஸ் குழு களமிறக்குகிறது.

யார் அந்த பிரபல விஜே

யார் அந்த பிரபல விஜே

விஜய் டிவி, ஜி தமிழ் என தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரபல விஜே அர்ச்சனா தான் லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ள அந்த பிரபலம். விஜேவாகவும் நடிகையாகவும் நடித்துள்ள அர்ச்சனா நிகழ்ச்சிக்கு வந்தால், பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

V-CONNECT | ANCHOR DIYA MENON CHAT PART-01 | தளபதிக்கு தங்கச்சியா நடிக்க ஆசை | FILMIBEAT TAMIL
ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

விஜே அர்ச்சனா தனது செல்ல மகள் சாரா வினித்தை எப்படி பிரிந்து இருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அம்மாவும் பொண்ணும் சேர்ந்து ஏகப்பட்ட விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலக்கி உள்ளனர். நிச்சயம் இது கஷ்டமாக இருந்தாலும், விஜே அர்ச்சனா அதனை ஏற்க முடிவு செய்து விட்டார் என்றே கூறுகின்றனர். விஜே அர்ச்சனாவுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X