மறைந்த நடிகை விஜே சித்துவுக்கு பிறந்தநாள் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்ட அப்பா கலங்க வைக்கும் வீடியோ!

சென்னை: மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போட்டோவுக்கு அவரின் அப்பா கேக் ஊட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா.

மக்கள் டிவி, சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளளார் சித்ரா.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார் சித்ரா. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

கணவரே காரணம்

கணவரே காரணம்

அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சித்ரா சின்னத்திரை மட்டுமின்றி கால்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

மக்களின் நாயகி

மக்களின் நாயகி

ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள்ளேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் நடைபெற்ற விஜய் டிவி விருது விழாவில் சித்ராவுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவருக்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டது.

சித்ராவுக்கு பிறந்தநாள்

சித்ராவுக்கு பிறந்தநாள்

இந்நிலையில் நேற்று முன்தினம் விஜே சித்ராவுக்கு பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவரது பெற்றோர் தங்களின் போலீஸ் குடியிருப்பில் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். சித்ரா போட்டோவுக்கு முன்னால் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்தும் கேக் வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.

போட்டோவுக்கு கேக் ஊட்டிய அப்பா

அப்போது சித்ராவின் தந்தை சித்ராவின் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்டு கலங்கினார். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X