Just In
- 2 min ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 36 min ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 1 hr ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 1 hr ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- News
மகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்!
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என் மகளை பாருங்க.. வந்தவர்களிடமெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை காட்டி கதறிய சித்துவின் அப்பா!
சென்னை: மறைந்த நடிகை சித்ராவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை இறுதி அஞ்சலிக்கு வந்தவர்களிடம் காட்டி அவரது தந்தை கதறியது கலங்க வைத்துள்ளது.
பிரபல விஜேயும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா நேற்று முன்தினம் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரான ஹேம்நாத் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்கொலைன்னு சொல்றத நம்பமாட்டேன்.. வேற ஏதோ நடந்திருக்கு.. விஜே சித்ரா உடலை பார்த்து கொந்தளித்த ஆசீம்

கணவரிடம் விசாரணை
சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட போதும் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவரிடம் நேற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகள்
மேலும் ஹோட்டல் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஹோட்டல் ஊழியர்கள் மற்றும சக நடிகர்களிடமும் போலீசார் விசாணை நடத்தினர். சித்ராவுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவர் இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சகோதரர் சரவணனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

கண்ணீர் அஞ்சலி
சித்ராவின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

எரியூட்டப்பட்டது
பின்னர் பிற்பகல் 3 மணிக்கு பிறகு சித்ராவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. முன்னதாக சித்ராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக கோட்டூர்புரத்தில் உள்ள அவரது தந்தை வீட்டில் பந்தல் போட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காட்டி காட்டி கதறிய தந்தை
அப்போது அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த அவரது அப்பா காமராஜ் அங்கு வந்து சென்றவர்களிடம் எல்லாம் காட்டி காட்டி கதறினார். அவர் உடைந்து போய் கதறுவதை பார்த்த ரசிகர்கள் யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என கலங்கி விட்டனர்.

தானாக உயர்த்திக் கொண்ட சித்து
சித்ரா மீடியாவுக்குள் வந்தது, சீரியலில் நடிப்பது, இது எதுவுமே அவரது அப்பாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். இதனால் தன்னுடைய சம்பாத்தியத்திலேயே டான்ஸ் மற்றும் பாட்டு கிளாஸுக்கு சென்று தரமான நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்டார் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.