ஹேம்நாத்தை வெளியே விடாதீங்க...விஜே சித்ராவின் தந்தை கோர்ட்டில் புதிய மனு

சென்னை : கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையின் காரணமாகவே நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Recommended Video

Chithra உன்னை தினமும் Miss பண்றேன் | Kathir Mullai, Pandian Stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் கால்ஸ் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வந்தார். மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற சித்ரா, சின்னத்திரை மற்றும் சினிமாவில் பெரிய உயரத்தை அடைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகை சித்ரா 2020 ம் ஆண்டு தான் தங்கி இருந்த ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். முதலில் தற்கொலை என சொல்லப்பட்ட நிலையில், பிறகு கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக பலரும் குற்றம்சாட்டிய நிலையில், ஹேம்நாத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ரா உயிரிழந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்கள் இதுவரை விலகவில்லை.

வழக்கை ரத்து செய்ய ஹேம்நாத் வழக்கு

வழக்கை ரத்து செய்ய ஹேம்நாத் வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார் ஹேம்நாத்.

மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை

மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஹேம்நாத் மீது தான் சந்தேகம்

ஹேம்நாத் மீது தான் சந்தேகம்

அதன்படி காமராஜ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தான் சித்ரா தற்கொலைக்கு காரணம்

இது தான் சித்ரா தற்கொலைக்கு காரணம்

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஹேம்நாத் தொடர்பாக பல விபரங்களையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹேம்நாத்தை விடாதீங்க

ஹேம்நாத்தை விடாதீங்க

விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோருவதாகவும், போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விசாரணையை எதிர்கொள்வதே சரியானது எனவும், எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X