தன்னைத்தானே தோனி என சொல்லிக்கொண்ட விஜே சித்து.. கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி இதுதான்!
சென்னை: நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் புரமோ வெளியாகி ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியா ஸ்டார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது காதல் கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை என ஏற்கவில்லை
பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரது மரணம் தற்கொலைதான் என்பதை உறுதி செய்தது. இருந்த போதும் சித்ராவின் குடும்பத்தினரும் அவருக்கு நெருக்கமானவர்களும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பதை ஏற்கவில்லை.

சித்ராவின் கணவர் கைது
அவரது மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ராவின் மரண வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.

மர்ம முடிச்சுகள்
இந்நிலையில், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சித்ராவின் மரணத்தில் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்ரா இறக்கும் முன்பு
இதனிடையே நடிகை சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது. அதாவது சித்ரா இறப்பதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் பங்கேற்றார்.

சொப்பன சுந்தரிஸ்
அன்றைய நாள் எடுக்கப்பட்ட முதல் எபிசோட் ஏற்கனவே ஒளிபரப்பான நிலையில், அவர் பங்கேற்ற மற்றொரு எபிசோடின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சொப்பன சுந்தரிஸ், ஜிகிடி கில்லாடிஸ் என்ற இரு அணிகளாக சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

சிவப்பு நிற கவுன்
சொப்பன சுந்தரிஸ் அணியில் இருக்கும் சித்ரா, சிவப்பு நிற கவுனில் சிவப்பு ரோஜாவை போல் உள்ளார். அந்த அணியினரிடம் பேசும் பிரியங்கா உங்கள்ல யாரு தோனி என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் நான் தான் தோனி என்கிறார்.

நானே தோனின்னு வச்சுக்கிட்டேன்
இதனைக்கேட்ட பிரியங்கா அப்படி என்ன கிழிச்சிட்டீங்க என் கேட்கிறார். அதற்கு கூலாக ஒன்னும் பண்ண மாட்டேன். ஹைட்டா இருக்கிறதால நானே தோனின்னு பேரு வச்சுக்கிட்டேன் என்று கூறுகிறார் சித்ரா.


Click it and Unblock the Notifications











