நாம சேர்ந்து இருக்குற போட்டோவ அனுப்பு.. நான் ஸ்டோரி வைக்கிறேன்.. சித்ராவின் கடைசி வாய்ஸ் மெசேஜ்!

சென்னை: மரணமடைந்த நடிகை சித்ரா கடைசியாக நண்ர் ஒருவருக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் வைரலாகி வருகிறது.

Recommended Video

Chithra வழக்கில் மறைக்கப்படும் உண்மை நீதி கிடைக்குமா? |JusticeForChithra

பிரபல விஜே, சின்னத்திரை நடிகையாக இருந்தவர் சித்ரா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலு நாச்சியார் என்ற சீரியலின் மூலம் சீரியலுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் பெரும் பிரபலம் ஆனார்.

அக்டோபரில் திருமணம்

அக்டோபரில் திருமணம்

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது காதலரான ஹேமந்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.

இருவருக்கும் தகராறு

இருவருக்கும் தகராறு

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி தனது கணவருடன் சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அப்போது சித்ராவுக்கும் அவரது காதல் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சித்ரா தற்கொலை

சித்ரா தற்கொலை

இதில் தன்னை செத்துத் தொலை என்று ஹேமந்த் கூறியதால் விரக்தியடைந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார் பொன்னேரி சிறையில் அடைத்துள்ளனர்.

சித்ராவின் நினைவுகள்

சித்ராவின் நினைவுகள்

சித்ரா மரணமடைந்து ஒரு வாரம் கடந்து விட்ட போதும் அவரது மரண அதிர்ச்சியில் இருந்து ரசிகர்களாலும் சக நடிகர்களாலும் மீள முடியவில்லை. சித்ராவுடன் பழகிய திரை பிரபலங்கள் அவருடன் பழகிய தருணங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

கால்ஸ் படம்

கால்ஸ் படம்

இந்நிலையில் நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மிக பெரிய பிரபலம் ஆகி கால்ஸ் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் அதனை பார்க்காமல் உயிரை மாய்த்துக் கொண்டார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

அண்மையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. கால்ஸ் என்ற அந்த படம் விரைவில் ரீலீஸ் ஆகப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை சபரிஷ் என்னும் புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

இந்நிலையில் சித்ரா தன்னுடன் பணியாற்றிய மதன் என்ற சக கலைஞருக்கு கடைசியாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வாய்ஸ் மெஸேஜ் தற்போது வைரலாகி வருகிறது.

இருந்தா அனுப்பு

இருந்தா அனுப்பு

அதில் பேசும் சித்ரா, டேய் மதன் உன்கூட இருக்குற போட்டோவை தேடிட்டு இருக்கன். 2 நாளா தேடி தேடி பார்க்குறேன் கிடைக்கல, ஹேப்பி பர்த்டே டா.. உன்கிட்ட இருந்தா அனுப்பு, நான் ஸ்டோரியில் வைக்கிறேன் என்று பேசியுள்ளார்.

மிஸ் யூ சித்து

மிஸ் யூ சித்து

சித்ரா தற்போது உயிரோடு இல்லாத நிலையில் அவருடைய இந்த வாய்ஸ் மெஸேஜ் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாய்ஸ் மெஸேஜை ஷேர் செய்து வரும் ரசிகர்கள் மிஸ் யூ சித்து என்று தங்களின் வேதனையை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X