மாமியாரும்..மருமகளும் என்னம்மா குத்தாட்டம் போடுறாங்க ..வைரலாகும் போட்டோஸ்!
சென்னை :வி.ஜே.சித்துவும், மெட்டி ஒலி புகழ் சாந்தி வில்லியம்ஸும் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செல்ல மருமகளாக வருபவர் தான் சித்து. சீரியல் நடிகையாக இருந்தாலும் பல முன்னணி நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு அவ்வப்போது பல போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் இவர் வல்லவர்.

அந்த வகையில் அன்றாடம் ஒரு புகைப்படம் என்று அழகான பட்டுப் புடவையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார் சித்து. சீரியலில் செல்ல மருமகளாக மட்டுமல்லாமல், நிஜத்திலும் அனைவரின் மனங்களை கொள்ளை கொண்டு செல்ல மகளாகவே வாழ்ந்து வருகிறார். இவர் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.
பல ரசிகர்கள் இவருக்கு கொடுக்கும் பரிசுகளை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வெளியிடுவார் சித்து .கைத்தறி புடவையாக இருந்தாலும் சரி ,பட்டு சேலையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ற மாதிரி மங்களகரமாக காட்சி கொடுப்பார் . ராயல் என்ஃபீல்டில் மாடலாக போஸ் கொடுப்பதிலும் ,கார் டிக்கியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்தாலும் புடவையில் பார்த்தாலும் ரசிக்கும்படியாக அழகாகவே இருக்கிறார் .

இவரது இயல்பான நடிப்பிற்கும் ,புகைப்படங்களுக்கும் பல ரசிகர்களை அவர் தன் வசம் வைத்துள்ளார். சமீபத்தில் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான சாந்தி வில்லியம்ஸ்சுடன் நடனமாடும் மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாக பரவி வருகின்றது.
இந்த லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில் பலவகையான போட்டோக்களை பதிவிட்டு எப்பொழுதும் இணையத்தளத்தில் பிஸியாகவே இருந்து வந்த சித்து. சில நாட்களாக படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். சீரியலுக்கு ரீஎண்ட்ரி கொடுத்ததை முன்னிட்டு அனைவரும் சீரியலை வெகுவாக பார்க்க தொடங்கியுள்ளனர். புது புது எபிசோட்களுடன் கலைகட்டி இருக்கும் அனைத்து சீரியல்கலும் பெருமளவு இல்லத்தரசிகளால் ரசிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் சித்துவிற்கு பல ரசிகர்களும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் பல அறிவுரைகளைக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











