பாவாடை தாவணியில் விதவித போஸ்..சித்து வெளியிட்ட நான் ஸ்டாப் போட்டோசூட் !

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துவரும் விஜே சித்து தன்னுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் அவர் நீல கலர் தாவணி அணிந்து, ஜில்லா படத்தின் கண்டாங்கி பாட்டில் வரும் காஜல் அகர்வால் போல் இருந்தார்.

இப்புகைப்படங்களை சித்துவின் ரசிகர்கள் மிக வேகமாக ஷேர் செய்து, வைரல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். விஜே சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம்மில் எப்பொழுதும் ஆக்டிவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் .

சித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நேரம் தவறாமல் வாரத்திற்கு குறைந்தப்பட்சம் நான்கு முதல் ஐந்து புகைப்படங்கள் வரை பதிவு செய்து தன்னுடைய ரசிகர்களை நெருக்கமாக வைத்துள்ளார். மிகவும் குறைந்த ஆட்களே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பாலோவர்ஸ் வைத்துள்ளார்கள், அதில் விஜே சித்துவும் ஒருவர். அவர் 1.2 மில்லியன் பாலோவர்ஸ் வைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு

Vj Chithu latest Instagram posts

டி. ஆர். பிஉச்சத்திற்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான ஓர் தொடர். பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி கொண்ட தொடர். இத்தொடரில் நடித்த அனைவரும் சிறந்த நடிகர்களாக வலம் வருகிறார்கள். வெறும் தொகுப்பாளராக வேலை செய்து கொண்டிருந்த சித்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறிய இடைவேளையில் தனக்கான ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார் .

Vj Chithu latest Instagram posts

குடும்பங்களின் அன்பை குவித்தது

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார். இந்த குடும்பத்தில் மற்ற மருமகளகளாக வரும் மீனா மற்றும் முல்லையால் எப்படி தன்னைப் பொருத்திக்கொள்கிறார்கள் என்று தான் கதை. இத்தொடரின் கதைத்தளம் பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வியலோடு ஒத்துப்போவதிலினால், இத்தொடருக்கு மிகவும் அதிகமான ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.

Vj Chithu latest Instagram posts

புதிய உச்சம்

சித்துவின் இயற்பேர் சித்ரா. விஜே சித்து தன்னுடைய ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். சித்து ஜீ தமிழ், சன் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி, வேந்தர் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக வேலை செய்துவந்துள்ளார். அப்பொழுது சித்துவின் திறமை முழுவதாக வெளியே தெரியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்த பிறகு, சித்துவின் மாயாஜாலம் தமிழக தொலைக்காட்சி ரசிகர்கள் மேல் பாய்ந்தது. இப்பொழுது சித்து ஆர்மீ என்று ஒரு கூட்டத்தையே தன் பின்னால் நிறுத்தியுள்ளார். சித்து சினிமாவில் காலடி எடுத்துவைப்பாரா என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தார்கள், கடந்த மாதம் 30'ஆம் தேதி அன்று சித்து திருமண நிச்சயிக்கப்பட்டு தன்னுடைய வாழ்வில் ஒரு அழகான பாகத்தை சந்திக்கவுள்ளார். எது எப்படியோ சிரித்த முகத்துடன் வித விதமாக போட்டோஸ் போட்டால் போதும் என்று ரசிகர்கள் விரும்பிகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X