சித்ராவை நினைத்து நினைத்து.. இன்னும் ஏங்கும் ரசிகர்கள்!

By Velsamy

சென்னை: விஜே சித்ரா இறந்து இரண்டு மாதங்கள் ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அதை மறக்காமல் அவருடைய போட்டோக்களை வைத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார்கள் .

Recommended Video

Vj Chithra மறைந்து இன்றோடு 2 மாதம் ஆகிவிட்டதா | Pandian Stores, Calls

இந்த போஸ்டர்களை பார்த்து பலர் கண்கலங்கி கமெண்ட்களை போட்டு வருகின்றனர் . சித்ராவின் போட்டோஸ்களும் பழைய வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

டிவிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியல்களில் முதல்முறையாக சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நகைச்சுவை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் புகுந்து விளையாடியவர் சித்ரா.

முல்லை

முல்லை

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் மக்களின் மனதில் வாசம் வீசிக்கொண்டிருந்த சித்ரா திடீரென்று இறந்த செய்தி கேட்டு அவருடைய ரசிகர்களும் நண்பர்களும் தவித்துக் கொண்டிருந்தனர் .இந்த நிலையில் அவர் இறந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய இழப்பை மறக்காமல் அவருடைய ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.

சிரித்த முகம்

சிரித்த முகம்

எப்போதுமே சிரித்த முகமாக இருந்த சித்திராவின் முகத்தை யாராலும் மறக்க முடியாமல் இருந்து வருகிறார்கள் .ஒரு மனநல மருத்துவராக இருந்து அனைவருக்கும் எனர்ஜி மட்டுமே கொடுத்து வந்த இவர் தற்போது இல்லை என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறார்கள்.

அறிவு

அறிவு

அழகிலும் சரி அன்பிலும் சரி இவருக்கு நிகர் யாருமில்லை என்று தான் இவருடைய ரசிகர்கள் எப்போதுமே கூறி வந்தனர். கூட இருப்பவர்களிடம் சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய கவலையை யாருக்கும் சொல்லாமல் தற்போது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார் என அவருடைய ரசிகர்கள் வருத்தத்தோடு தெரிவித்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் மர்மம்

நாளுக்கு நாள் மர்மம்

அவருடைய இறப்பில் நாளுக்கு நாள் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்ந்து வந்தாலும் இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை .ஆனாலும் அவருடைய ரசிகர் தற்கொலை செய்து கொள்ளும் கோழை அல்ல என்கிறார்கள் .எப்போதுமே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த இவர் இடத்தில் யாரும் வர முடியாது என்று தான் அனைவரும் கூறி வருகிறார்கள் .

ரசிகர்களின் கண்ணீர்

ரசிகர்களின் கண்ணீர்

அவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனுப்பிய வாழ்த்து மடல்களும் ஷிப்ட்களும் அவரது வீட்டில் ஆங்காங்கே குவித்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து கண்ணீரோடு கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் பிறந்த நாளுக்கும் அவர் சர்ப்ரைஸ் செய்த வீடியோக்களும் அவர்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் களையும் ரசிகர்கள் வேதனையோடு இன்ஸ்டாகிராமில் ஒவ்வொருவராக பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

இன்று அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவருடைய போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்திற்கு மாலை அணிந்து பலர் வேதனையோடு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அவர் நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்காக அவருடைய ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கனவு

கனவு

இந்த திரைப்படத்தின் அவருடைய ஆசை கனவு எல்லாமே அடங்கி இருந்தது என்று சித்ராவின் ஆசை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களின் கனவாகவும் இருந்தது என சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இன்னும் பல வருடமானாலும் சித்ராவின் தாக்கத்திலிருந்து யாரும் விடுபட முடியாது போல. அந்த அளவுக்கு அத்தனை பேரின் இதயத்தையும் நனைத்து விட்டுப் போயுள்ளார் சித்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X