விஜே சித்துவின் வருங்கால கணவர் நல்லவன் கிடையாது… உண்மை முகத்தை கிழித்தெறியும் நடிகைகள்!

சென்னை : இப்பொழுது தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் விஜே சித்துவின் மரணம் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Recommended Video

Chitra கணவர் போகாத pub இல்லை.. தோழி பரபர புகார் | Tamil Filmibeat

தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணமாக விளங்கி வந்த சித்ரா என்கிற சித்து , பல கஷ்டங்கள் தோல்விகள் அனைத்தையும் சந்தித்து திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருந்த மிகச் சிறந்த திறமையான நடிகை ஆவார்.

இந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததை பார்த்து திரையுலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில், விஜே சித்துவின் வருங்கால கணவர் நல்லவன் கிடையாது என சின்னத்திரை நடிகைகள் பலரும் பரபரப்பாக கூறி வருகின்றனர்.

மர்ம முடிச்சுகள்

மர்ம முடிச்சுகள்

தமிழ் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் விஜே சித்துவின் நம்பமுடியாத மரணம் ஒரு தற்கொலை மரணம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இதில் இருக்கின்றது என பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

சந்தேகக் கேள்விகள்

சந்தேகக் கேள்விகள்

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்த்து நின்று போராடி வென்று காட்டும் தைரியமான மனம் படைத்த சித்து கண்டிப்பாக தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் அவர் கண்டிப்பாக கொலை செய்யப்பட்டுள்ளார் என ரசிகர்கள் உட்பட பலரிடம் இருந்தும் சந்தேகக் கேள்விகள் எழுவது நம்மால் பார்க்க முடிகிறது.

வீட்டாருக்கும் பிடிக்கவில்லை

வீட்டாருக்கும் பிடிக்கவில்லை

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட விஜே சித்து தொலைக்காட்சியில் நடிப்பது மணமகன் வீட்டாருக்கும் பிடிக்கவில்லை எனவும் அதனால் சித்து திருமணத்தை நிறுத்த இந்ததாகவும் சித்துவின் தாய் திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார்.

உண்மைகளை வெளிப்படையாக

உண்மைகளை வெளிப்படையாக

சித்துவின் மர்ம மரணத்தில் பல்வேறு முடிச்சுகள் இருந்துவரும் நிலையில், மரணமடைந்த அன்று ஹோட்டல் அறையில் சித்து உடன் தங்கியிருந்த ஹேம்நாத் மீது பலரது சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சித்து உடன் பணிபுரிந்த நடிகைகள் பலரும் இப்பொழுது ஹேம்நாத் பற்றிய சில உண்மைகளை வெளிப்படையாக பேட்டிகளின் மூலம் தெரிவித்துள்ளது மேலும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

நெருங்கிய நண்பர்களாக

நெருங்கிய நண்பர்களாக

விஜே சித்துவுடன் இணைந்து தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரபல நடிகையான ரேகா நாயர் இப்பொழுது தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே துறையில் ஒன்றாக பணியாற்றி வரும் இவர்கள் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

பெண்கள் சகவாசம்

பெண்கள் சகவாசம்

அதே சமயம் சித்துவின் வருங்கால கணவர் ஹேம்நாத்தும் மிகவும் பரிச்சயம் எனவும், ஆனால் நல்லவன் கிடையாது. அவனுக்கு சென்னையில் பல பெண்களுடன் தொடர்பு இருக்கின்றது. குடிப்பழக்கம் பெண்கள் சகவாசம் மிகுந்த இவரை இன்றும் பப் மற்றும் பார்டிகளில் இயல்பாக பார்க்க முடியும் இதெல்லாம் தெரிந்தது நாளிலேயே சித்து திருமணத்தை நிறுத்த முயன்றதாகவும் அதற்குள் இப்படி நடந்துவிட்டது எனவும் சித்துவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணமாக இருக்க முடியும் என பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

பலமுறை எச்சரித்து

பலமுறை எச்சரித்து

அதேபோல தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலு ஷாம்மு சித்துவிடம் ஹேம்நாத் பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என பலமுறை தான் எச்சரித்து உள்ளதாகவும், மேலும் கடைசிவரையில் சித்து திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பமான நிலையில் இருந்து வந்ததாகவும் திருமணத்தை நிச்சயதார்த்தத்தோடு நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும், ஷாலு ஷாம்மு கூறியுள்ளார்.

இயல்பாகவே இல்லை

இயல்பாகவே இல்லை

அதேபோல விஜய்டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆயுத எழுத்து தொடரில் நடித்திக்கொண்டிருந்த நடிகை சரண்யாவும், எப்பொழுதும் கலகலப்பாக சுற்றிக்கொண்டிருக்கும் சித்து சில நாட்களாகவே இயல்பாகவே இல்லை, எப்பொழுது பார்த்தாலும் போனிலேயே மூழ்கிக்கொண்டு தொடர்ந்து ஹேம்நாத் உடன் வாக்குவாதத்தில் இருப்பார். இதைப்பார்க்கவே எங்களுக்கு சங்கடமாக இருந்தது. இந்த நிலையில் இவரது மரணச் செய்தி எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எங்களால் இன்னும் நம்பவே முடியவில்லை. மிகவும் தைரியமான பெண்மணி எதையும் துணிந்து எதிர்க் கொள்வாள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என மேலும் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

விரைவில் உண்மை வெளிவரும்

விரைவில் உண்மை வெளிவரும்

திரைப்பிரபலங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் விஜே சித்துவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வருங்கால கணவர் ஹேம்நாத் நல்லவர் இல்லை அவர் மீது தான் எங்களுக்கு முழு சந்தேகமும் உள்ளது உண்மை வெளிவரும் வரை போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பேட்டிகளின் மூலம் தெரிவித்து உண்மை விரைவில் வெளிவரும் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X