முதல் படமே கடைசி படமாகிடுச்சே.. சித்ராவின் 'கால்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு.. ரசிகர்கள் சோகம்!
சென்னை: மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர், பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா.
28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானர்.

ஈவிபி பிலிம்சிட்டி
பின்னர் சின்னத்திரை நடிகை ஆனார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கபதற்காக, சென்னை நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார் சித்ரா.

குளிக்க போகிறேன்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இரவு 2.30 மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தனது வருங்கால கணவர் ஹேமந்திடம் சொல்லிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வாரதால், ஓட்டலில் இருந்தவர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தனர்.

கடைசி படம்
அப்போது அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ரா, கால்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம். ஆனால் அவர் நடித்த முதல் படமே கடைசி படமாகவும் அமைந்துவிட்டது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் கம்பீரமான லுக்குடன் விஜே சித்ரா இருக்கிறார். இந்த படத்தை சபரீஷ் இயக்குகிறார். இதையடுத்து ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். எஸ்.ஜெயகுமார், காவேரி செல்வி தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











