Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சித்ராவின் செலுலாய்டு கனவுகள் விரைவில் திரையில் ...ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது!
சென்னை: பெரும் வெற்றிக்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் வெளியான இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
வெளியான இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரண்டே தினங்களில்
அப்படத்தின் "காலங்கள் கரைகிறதே" எனும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதுவும் வெளிவந்த இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது. மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நடிகை
இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று திரைக்கு வர தயாராகவுள்ளது. இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காக இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உழைத்த நடிகர்கள்
மேலும் இப்படத்தின் இயக்குனர் திரு. சபரிஷ் அவர்கள் பேசுகையில் வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர். அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கை தட்டல்கள்
சித்ராவின் ரசிகர்கள் இணையதளத்தில் இந்த படத்தை பற்றி தொடர்ந்து எழுதி வருகின்றனர். சோஷியல் மீடியா முழுவதும் இந்த படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பு கூடி உள்ளது. சித்ராவின் ஆத்மா கை தட்டல்கள் மூலமாவது சாந்தி அடைய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கால்ஸ் படம் பற்றி உன்னதமான உணர்வுகளுடன் பல குட்டி கதைகள் பகிர்ந்த வண்ணம் பல எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம் சித்ராவின் சினிமா, சித்ராவின் செலுலாய்டு கனவுகள் விரைவில் திரையில் .