கதறி கதறி அழுது தீர்த்தாச்சு.. சித்ராவின் கடைசி படம்...கால்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: மறைந்த நடிகை விஜே சித்ராவின் முதல் தமிழ் படமான கால்ஸ் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டீசர் சித்ராவின் நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதாக அமைந்ததுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான சித்ரா, சென்னையில் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அவர் ஹீரோயினாக நடித்த முதல் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற விநியோகஸ்தரான ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் வெளியிடும் இப்படம் பிப்ரவரி 26 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜெ.சபரீஸ் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், வினோதினி, ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்ராவின் மறைவுக்கு பிறகு ரிலீசாகும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மறைந்த நடிகை விஜே சித்ராவின் படம் என்றே ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனமும், படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய ட்விட்டர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











