விஜே சித்ரா மரண வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறதா? அரசியல் பின்புலம் உள்ளதா? ஹேம்நாத் புகார் ஏன்?
சென்னை: சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்தது பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவருடன் பணியாற்றிய சக நடிகைகளும், விஜே சித்ராவின் பெற்றோர்களும் கூறி வந்தனர்.
போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தும் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார். இந்நிலையில், ஹேம்நாத் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அளித்துள்ள புதிய புகார் பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜே சித்ரா மரணம்
மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கிய விஜே சித்ராவின் மீடியா பயணம் சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, விஜய் டிவியில் சீரியல் மற்றும் தொகுப்பாளினி என நீண்டு கொண்டே சென்றது. ஆனால், திடீரென தனியார் ஹோட்டல் அறையில் அதிகாலை நேரத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலருடன் தொடர்பு
சின்னத்திரையில் நடித்து வந்த விஜே சித்ரா வெள்ளித்திரையில் கால்ஸ் என்கிற படத்திலும் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த படம் வெளியானது. கடைத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விஜே சித்ரா சென்று வந்த நிலையில் அவருக்கு பலருடன் தொடர்பு உள்ளதாக ஏகப்பட்ட யூகங்கள் அவரது மறைவுக்கு பின்னர் கிளம்பின. இதில், கொடுமை என்னவென்றால் விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தே 4 பேருடன் அவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்திருப்பது தான் விஜே சித்ராவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உயிருக்கு ஆபத்து
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி விஜே சித்ரா காலமானார். இந்நிலையில், தற்போது ஹேம்நாத், விஜே சித்ரா மரணத்தில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், அவர்களின் பெயர்களை வெளியே சொன்னால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பி உள்ளது.

மீண்டும் உயிர்பெறும் வழக்கு
ஹேம்நாத் இப்படியொரு பரபரப்பு புகார் அளித்துள்ள நிலையில், அரசியல் பின்புலம், தொழிலதிபர் என பலர் பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், விஜே சித்ராவின் மரண வழக்கு மீண்டும் உயிர்பெறுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











