விஜே சித்துவின் மரணத்தில் திடீர் திருப்பம்.. விசாரணை வளையத்தில் சிக்கிய வருங்கால கணவர்!

சென்னை : இன்று அதிகாலை சமூக இணையதளங்களில் மிக வேகமாக பரவி வரும் செய்திகளில் ஒன்று நடிகை விஜே சித்ராவின் மரணம்.

Recommended Video

Vj Chithra தற்கொலைக்கு என்ன காரணம் | வீடியோ பதிவை பாருங்கள்

தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய சித்து விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹேம்நாத் என்பவருடன் சித்துவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதில் முக்கிய குற்றவாளியாக அவருடன் இருந்த ஹேம்நாத் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

மிகச் சிறந்த நடிகையாக

மிகச் சிறந்த நடிகையாக

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜே சித்துவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மக்கள் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய சித்து என்கிற சித்ரா இப்பொழுது சின்னத்திரையில் அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகையாக வந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

விஜய் டிவியில் இப்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சித்து , அதேசமயம் பல்வேறு நிகழ்ச்சிகளை செம கலகலப்பாக தொகுத்து வழங்கி அனைவரின் இதயங்களையும் வென்று வந்துள்ளார்.

ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம்

ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம்

இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்கும் பிடித்த நாயகியாக வலம் வந்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆசையும் இருந்து வர, விரைவில் அதற்கான வேலைகள் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹேம்நாத் என்ற தொழிலதிபருடன் சித்துவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்று வந்தது.

வாக்குவாதம் நடைபெற்றதாக

வாக்குவாதம் நடைபெற்றதாக

சென்னையில் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த சித்து மற்றும் ஹேம்நாத் அவருக்கும் இடையே சமீப காலமாகவே பல முரண்பாடுகள் ஏற்பட்டு தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

குற்றவாளியாக இருக்கலாம்

குற்றவாளியாக இருக்கலாம்

எனினும் சித்துவின் மரணத்திற்கு பெரும்பாலோனோர் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சந்தேகித்து வரும் நிலையில் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணை வளையத்திற்குள் உள்ள ஹேம்நாத் இந்த மரணத்தில் குற்றவாளியாக இருக்கலாம் என பெரும்பான்மையானோர் யூகித்து வருகின்றனர். மேலும் சித்து தொலைக்காட்சியில் சில நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளில் நடிப்பது பிடிக்காமல் கடந்த சில நாட்களாகவே இருவருக்கு இடையேயும் அடிக்கடி சண்டை இருந்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X