விஜே சித்ராவுக்கு ஹேமந்த் 4வது காதலரா?.. இணையத்தில் பரவும் பரபரப்பு தகவல்!

சென்னை : தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை விஜே சித்ராவுக்கு ஹேமந்த் 4வது காதலர் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாஃபியா கும்பலுடன் தொடர்பு

மாஃபியா கும்பலுடன் தொடர்பு

கடந்த மாதம் நிபந்தனை ஜாமினில் பெற்று வெளியே வந்த ஹேமந்த், தனது மனைவி சித்ராவின் மரணத்திற்கு மாஃபியா கும்பல்தான் காரணம் என கூறியிருந்தார். ஆனால் ஹேமந்த் சொல்வதை சித்ராவின் பெற்றோர் மறுத்தனர். சித்ரா உண்மையில் இரவு பகலாக கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்தாள்.

அபாண்ட பழி

அபாண்ட பழி

ஹேமந்த் சொல்வது போல சித்ராவுக்கு எந்த மாஃபியாக கும்பலுடனும் தொடர்பு இல்லை. சித்ராவுக்கு கஞ்சா மற்றும் போதை பழக்கம் இருந்ததாகவும், சித்ராவுக்கு ஆண் நண்பர்களின் சகவாசம் அதிகம் என்று இறந்தவள் மீது இப்படி அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பது ஹேமந்திற்குத்தான் தெரியும் என்று சித்ராவின் பெற்றோர் கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தனர்.

ஹேமந்த் தான் காரணம்

ஹேமந்த் தான் காரணம்

மேலும், சித்ராவின் தோழி நடிகை ரேகா நாயர், சித்ராவின் தற்கொலைக்கு காரணமே ஹேமந்த் தான். அவர் இறந்த கவலையே இல்லாமல் ஹேமந்த் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும், ஹேமந்தே பணத்திற்காக சித்ராவை மற்றவர்களுடன் உல்லாசமாக இருக்க அனுப்பி வைப்பார் என்றும் பல பரபரப்பான தகவல்களை பரப்பினார்.

4வது காதலர்

4வது காதலர்

மேலும், சித்ரா பணத்திற்காக பலருடன் தொடர்பில் இருந்ததாகவும், பணத்தாசை தான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது எனவும், மேலும் பணப்பிரச்சனை இருந்தபோது கடை திறப்பு விழாவுக்கு சென்ற சித்ராவுக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், ஹேமந்த் சித்ராவுக்கு 4 வது காதலர் என்றும் செய்திகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X