மிஸ் யூ சித்ராக்கா.. தற்கொலை செய்துகொண்ட விஜே சித்ராவின் கால்ஸ் டீசர் ரிலீஸ்.. ரசிகர்கள் உருக்கம்

By

சென்னை: தற்கொலை செய்துகொண்ட விஜே சித்ராவின் நடித்துள்ள கால்ஸ் என்ற படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர், பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா.

28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பின்னர் சின்னத்திரை நடிகை ஆனார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கபதற்காக, சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார் சித்ரா.

குளிக்க போகிறேன்

குளிக்க போகிறேன்

இந்நிலையில், கடந்த மாதம் 9 ஆம் தேதி இரவு 2.30 மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தனது வருங்கால கணவர் ஹேமந்திடம் சொல்லிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், ஓட்டலில் இருந்தவர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தனர்.

ஆர்.டி.ஓ விசாரணை

ஆர்.டி.ஓ விசாரணை

அப்போது அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அவர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ நடத்திய விசாரணை அறிக்கை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

அதில், நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சித்ரா தற்கொலை வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அவருடைய அம்மா முதலமைச்சர் தனி பிரிவில் புகார் அளித்திருக்கிறார்.

முதல் படம்

முதல் படம்

இந்நிலையில் சித்ரா, கால்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம். அவர் நடித்த முதல் படமே அவருக்கு கடைசி படமாகவும் அமைந்துவிட்டது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் கம்பீரமான லுக்குடன் விஜே சித்ராவின் தோற்றம் இருந்தது.

மிஸ் யூ சித்ராக்கா

மிஸ் யூ சித்ராக்கா

இந்த படத்தை சபரீஷ் இயக்கியுள்ளார். எஸ்.ஜெயகுமார், காவேரி செல்வி தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து பல ரசிகர்கள் மிஸ் யூ சித்ராக்கா என்று கூறியுள்ளனர். சிலர் உருக்கமான பதிவுகளை கமென்ட் பகுதியில் வெளியிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X