சிம்பு - தனுஷ் கூட ரொமான்ஸ்க்கு நான் ரெடி.. அஜித்திடம் மன்னிப்பு கேட்கனும்.. டிடி ஓபன் ஸ்டேட்மெண்ட்!
சென்னை: சின்னத்திரை பிரபலம் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன். இவரை சின்னத்திரை ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வெகு சில படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் இவர் சம்பாதித்து வைத்துள்ள அன்பு அவருக்கு அங்கீகாரத்தை வெள்ளித்திரையிலும் பெற்றுக் கொடுத்தது. அண்மையில் இவர் அளித்த பேட்டியில் மிகவும் மனம் விட்டுப் பேசியுள்ளார். இதில் பல சுவாரஸ்யமான தகவல்களை சொல்லியுள்ளார்.
அதாவது அந்த பேட்டியில் நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் போது, " சினிமாவில் நடிப்பதை நான் மட்டும் முடிவு செய்துவிட முடியாது. தயாரிப்பாளர்களும் முடிவு செய்ய வேண்டும். முன்பெல்லாம், நான் தொலைக்காட்சியில் இருக்கிறேன் என்று கூறினார்கள். அதனால்தான் இப்போது தொலைக்காட்சியை விட்டு விலகிவிட்டேன். பார்க்கலாம், எதிர்காலத்தில் ஏதாவது வாய்ப்பு வருகிறதா இல்லையா என்று. ஆனால் ஒரு கண்டிஷன், நான் நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன். அக்கா கதாபாத்திரம், தோழி கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டால் நடிக்க மாட்டேன்.
ரொமான்ஸ் பண்ணச் சொல்லுங்க நான் ரொமான்ஸ் செய்யறேன் என்று கூறினார். உடனே யாருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஆசை உள்ளது என்று கேட்டதற்கு, விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸாக நடிக்க ஆசை உள்ளது. அவரது நடிப்பில் ஒரு எதார்த்தம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவருடன் நடித்தால் நான் சில விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

சிம்பு - தனுஷ்: அதேபோல், STR உடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூறினார். சிம்புவின் பெயரை சொன்னதும் அரங்கமே அதிரும் அளவுக்கு அங்கிருந்தவர்கள் கைதட்டினார்கள். அதேபோல் தனுஷ் சாருடன் நடிக்க வேண்டும். அவரது படத்தில் ஒரு நாள் தான் நடித்தேன். அந்த ஒரு நாளில் நான் கற்றுக் கொள்ள நிறைய இருந்தது என்று பேசினார். அவரது இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த பேட்டியில் அஜித் குறித்து பேசினார்.
அஜித்: அதாவது அஜித் குறித்து பேசும்போது, " எனக்கு அஜித் சாரின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறினேன். காரணம், அந்த வாய்ப்பு எனக்கு வந்தபோது எனது முழங்காலில் ஆபரேஷன் செய்து 20 நாட்கள்தான் ஆகியுள்ளது. என்னால் அப்போது நடக்க கூட முடியவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் மறுக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன். அஜித் சார் வேதாளம் படத்தில் உங்கள் தங்கையாக நான் நடிக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மன்னிப்பு: கடந்த 10 ஆண்டுகளா நான் இந்த மன்னிப்பை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது கூறுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் அஜித் சார்" என்று கூறியுள்ளார். டிடி தனது பேட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் டிடி விரைவில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











