நான் லெஸ்பியனா? உங்களுக்கு அறிவே இல்லையா? விஜய் டிவி ஜாக்குலின் அதிரடி பதில்!

சென்னை : விஜய் தொலைக்காட்சி பல பிரபலங்களை உருவாக்கி உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை மூலம் பிரபலமாகியவர் தான் ஜாக்குலின்.

விஜய் டிவியில் கலக்கப்போது யாரு என்ற பிரபலமான காமெடி நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார்.

அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.

விஜே ஜாக்குலின்

விஜே ஜாக்குலின்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஜொலித்த ஜாக்குலின், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகில படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த மிகப்பெரிய வெற்றியை பெற்ற போதும், ஜாக்குலினுக்கு படவாய்ப்பு வராததால், விஜய் தொலைக்காட்சியில் தேன்மொழி B.A ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்திருந்தார்.

நடிக்கவில்லை

நடிக்கவில்லை

பல வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஜாக்குலின் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த நாடகத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இந்த தொடர் முடிந்த பிறகு, வேறு சீரியலில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனார். ஆனால், ஜாக்குலின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஓங்கி அடிக்கனும்

ஓங்கி அடிக்கனும்

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜாக்குலின் அளித்த பேட்டியில், ஆங்கராக இருக்கும் போது நிகழ்ச்சிக்கு வரும் சில பிரபலங்கள், தோள் மீது கை போடுவார்கள், தொட்டு தொட்டு பேசுவார்கள். அவர்கள் தங்களை பெரிய ஸ்டாராக நினைத்துக் கொண்டு படுமோசமாக நடந்து கொள்வார்கள் அவர்களை பார்க்கும் போது ஓங்கி அடிக்கலாம் என்று தோன்றும் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

நீங்கள் லெஸ்பியனா?

நீங்கள் லெஸ்பியனா?

இதையடுத்து, செய்தியாளர், நீங்கள் லெஸ்பியனா என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கிறார்கள் என்றார். இதற்கு பதிலளித்த ஜாக்குலின், நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்தாலே தப்பா கமெண்ட் போடுவார்கள். உங்களுக்கு அறிவே இல்லையா, உங்களுக்கு என்ன அப்படி உறுத்துகிறது. என்னை மட்டும் இல்லை, இதே போல பல பிரபலங்களையும் கேலி செய்கிறார்கள் என்று ஆத்திரத்தில் கத்தினார்.

More from Filmibeat

Read more about: reply பதில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X