உங்களுக்கு அசிங்கமா இல்லையா… நெட்டிசன்களின் கமெண்டால் கடுப்பான ஜாக்குலின் !

சென்னை : விஜய் டிவியில் கலக்க போவது யாரு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி புகழ் பெற்றவர் ஜாக்குலின்.

டாம் பாய் லுக்கில் இருக்கும் தன் தோழியுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நெட்சன்ஸ் அது பையனா, பெண்ணா என்று கேட்டு கலாய்த்துவிட்டனர். இவர்களுக்கு பதில் தரும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.

பல திறமைசாலிகள்

பல திறமைசாலிகள்

விஜய் டிவியில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் விரும்பும் படி இருக்கும். இதனால் இந்த தொலைக்காட்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கு என்று சொல்லாம். மேலும் பல திறமைசாலிகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் விஜய் டிவிக்கு உண்டு.

தொகுப்பாளர்

தொகுப்பாளர்

அப்படி விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் ஜாக்கிலின். கலகலப்பான சிரிப்பு, இயல்பான பேச்சு என அனைவரின் மனதிலும் விரைவில் இடம் பிடித்து விட்டார் ஜாக்குலின். அதுவும் ரக்ஷனுடன் ஜாக்குலின் தொகுத்து வழங்கும் போது இவங்களை அனைவரும் வைத்து கலாய்ப்பது ரசிக்கும் படியாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு இது ஒரு கூடுதல் சிறப்பாகவே இருந்தது.

Recommended Video

Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்
நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

அதன் பிறகு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக தோன்றி இருந்தார். அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய ஜாக்குலின் தேன்மொழி பிஏ என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். அந்த தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து ஜாக்குலினுக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

அசிங்கமா இல்லையா

அசிங்கமா இல்லையா

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு நாளுக்கு முன்னாடி நான் ஒரு போட்டோவை போட்டு இருந்தேன் உடனே அது யாரு பொண்ணா,பையனானு கேக்குறீங்க அவங்க பொண்ணுதான் அவங்க சம்பாதிக்கிற காசுல அவங்க முடி வெட்டிக்கிறாங்க இதை கேட்க உங்களுக்கு அசிங்கமா இல்லை.

கமெண்டை ஆஃப் பண்ண மாட்டேன்

ஒரு முடி விஷயத்துலக்கூட மத்தவங்க சொல்லுறத கேட்கனும்னு அவசியம் இல்லை அவங்களுக்கு பிடிச்சத அவங்க செய்றாங்க. வெளி உலகத்துக்கு நல்லவனா காட்டிகிட்டு , உள்ளே அசிங்கமா இருக்காதீங்க எது பண்ணாலும் தைரியமா பண்ணுங்க, இல்லை நீங்க இப்படித்தான் இருப்பீங்கனா எனக்கு கவலை இல்லை. நான் கமெண்ட்டை ஆஃப் பண்ண மாட்டேன் என்று மிகவும் கோபமாக அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X