கையைப் புடி.. இதயத்தை தாங்கிக் கொள்.. ஓவர் ரொமான்ஸில் மகாலக்‌ஷ்மி - ரவீந்தர்.. செம டிரெண்டாகுது!

சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மகாலக்‌ஷ்மி திருமணம் செய்து கொண்ட நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட ரொமான்ஸ் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகின்றனர்.

லிப்ரா புரொடக்‌ஷன் கம்பெனியை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஃபேட்மேன் எனும் பெயரில் பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை விமர்சித்தும் வந்தார்.

முன்னாள் சன் மியூசிக் விஜே மற்றும் சின்னத்திரை நடிகையான மகாலக்‌ஷ்மி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதில் இருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் ட்ரோல்களும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

மகாலக்‌ஷ்மியே கிடைச்சிட்டா

மகாலக்‌ஷ்மியே கிடைச்சிட்டா

மகாலக்‌ஷ்மி போல ஒரு பொண்ணு வேணும்னு எல்லாரும் நினைப்பாங்க, எனக்கு அந்த மகாலக்‌ஷ்மியே பொண்ணா கிடைச்சிட்டா என விஜே மகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் போட்ட போஸ்ட் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? என சில ரசிகர்கள் ஷாக் ஆகி ஏகப்பட்ட ட்ரோல்களையும் பதிவு செய்தனர்.

பணத்துக்காக அல்ல

பணத்துக்காக அல்ல

தயாரிப்பாளரிடம் அதிக பணம் இருப்பதால் தான் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என மகாலக்‌ஷ்மியை நெட்டிசன்கள் இழிவாக பேசி ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், காதல் காரணமாகத்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றும் பணத்துக்காக அல்ல என்றும் மகாலக்‌ஷ்மி பதிலடி கொடுத்திருந்தார்.

ரெசார்ட்டில் ஹனிமூன்

ரெசார்ட்டில் ஹனிமூன்

மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் திருமணம் முடிந்த நிலையில், தங்களது தேனிலவை மகாலக்‌ஷ்மி மற்றும் ரவீந்தர் கொண்டாடி வந்தனர். அதே நேரத்தில் ஏகப்பட்ட யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து பெரிய அளவில் ட்ரோல்கள் குவியாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இருவரும் ஈடுபட்டனர்.

கையை புடி

கையை புடி

இந்நிலையில், மீண்டுமொரு புதிய போஸ்ட்டை பார்த்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை மகாலக்‌ஷ்மி. "Hold my hand, hold my heart and hold me forever ravindarchandrasekaran" என பதிவிட்டு இந்த பக்கம் அவரும் அந்த பக்கம் டெடி பியர் பொம்மையும் வைத்துக் கொண்டு மகாலக்‌ஷ்மி பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

Fat Man எனும் பெயர் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து கொண்டு மகாலக்‌ஷ்மி அருகே செம க்யூட்டாக ரவீந்தர் அமர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேரும் ரொம்ப அழகாக இருக்கீங்க, இப்படியே எப்பவும் சந்தோஷமாக வாழணும் என வாழ்த்தி லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X