ரவீந்தர் கைதுக்கு பிறகு முதல் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை: சமீபத்தில் திருமண நாளை கொண்டாடிய மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் டிரெண்டான நிலையில், தனது கணவர் கைதுக்கு பிறகு எந்தவொரு பதிவும் போடாமல் இருந்து வந்த மகாலட்சுமி திடீரென இன்ஸ்டாகிராமில் வரிசையாக போட்டோக்களை போட்டிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை சோலோவாக கொண்டாடிய மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டுப் புடவை மற்றும் நகைகளை அணிந்துக் கொண்டு செம ஹேப்பியாக ஃபிரண்ட் மற்றும் பேக் போஸ் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Vj Mahalakshmi posts some happy face photos after her husband Ravindar Chandrasekar got arrested

மேலும், அதற்கு கேப்ஷனாக அவர் போட்டுள்ளது தான் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

மோசடி வழக்கில் கணவர் கைது: லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி வரை மோசடி நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் ரவீந்தரை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். மேலும், ஜாமின் தர முடியாது என சென்னை எழும்பூர் நீதிமன்றமும் மறுத்து விட்ட நிலையில், சிறைக் காவலில் வாடி வருகிறார் ரவீந்தர் சந்திரசேகர்.

Vj Mahalakshmi posts some happy face photos after her husband Ravindar Chandrasekar got arrested

சந்தோஷத்தில் மகாலட்சுமி: கணவருடன் சந்தோஷமாக திருமண நாளை கொண்டாடிய மகாலட்சுமி கணவர் கைதுக்கு பிறகு எந்தவொரு போஸ்ட்டையும் சோஷியல் மீடியாவில் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது புதிய பட்டுப்புடவையை அணிந்து கொண்டு நகைகளை மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு சந்தியா கலெக்‌ஷன் எனும் டிசைனருக்கு விளம்பர போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வித விதமான போஸ்: எந்தவொரு வருத்தமும் மகாலட்சுமியின் முகத்தில் தென்படவில்லையே என்றும் கணவர் கம்பி எண்ணுறாரு, இவங்க இங்க கலர் கலரா டிரெஸ் போட்டு போஸ் கொடுத்து காசு பார்க்கிறாங்க என கமெண்ட்டுகள் தாறுமாறாக குவிந்து வருகின்றன. அழகா இருக்கீங்க மகா என்று அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Vj Mahalakshmi posts some happy face photos after her husband Ravindar Chandrasekar got arrested

இதுவும் கடந்து போகும்: நடிகை மகாலட்சுமி அந்த போஸ்ட் உடன் சேர்ந்து இதுவும் கடந்து போகும் என கேப்ஷன் போட்டிருப்பது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

கணவர் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி புகார் காரணமாக சிறையில் வாடி வரும் நிலையில், சிரித்தபடி போஸ் போட்டு விட்டு இதுவும் கடந்து போகும் என மகாலட்சுமி போஸ்ட் போட்டுள்ளாரே என ரசிகர்கள் வியப்புடன் அந்த பதிவை பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X