எவ்ளோ பெரிய முருகர் சிலை.. வெள்ளை சேலையில் விஜே மகாலட்சுமி.. பூஜை அறை எப்படி இருக்கு பாருங்க!

சென்னை: சுதந்திர தினத்தை தேசியக் கொடியுடன் பலரும் கொண்டாடி வரும் நிலையில், சற்றே வித்தியாசமாக சேவற் கொடி வைத்திருக்கும் தமிழ்க் கடவுளான முருக பெருமானை வழிபட்ட வாறே சுதந்திர தின வாழ்த்துக்களை விஜே மகாலட்சுமி வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்ட விஜே மகாலட்சுமி தனது பூஜை அறையில் முருகரை வணங்கிய புகைப்படங்களை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

VJ Mahalakshmi shares Pooja room photos and send Independence day wishes

அவரது வீட்டின் அழகான பூஜை அறையை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வாவ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

வெள்ளை சேலையில் விஜே மகாலட்சுமி: அப்படியே சரஸ்வதி தேவி போல வெள்ளை நிற சேலையை அணிந்துக் கொண்டு விஜே மகாலட்சுமி சுதந்திர தினத்தை முன்னிட்டு முருக பெருமானை வழிபாடு நடத்தி வெளியிட்ட பூஜை அறை புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை மட்டுமின்றி விஜே மகாலட்சுமியின் தீவிர ரசிகர்களை லைக் மற்றும் ஹார்ட்டின் போட வைத்துள்ளது. வெள்ளை நிற சேலைக்கு மேட்ச்சாக வெள்ளை நிற ஜாக்கெட்டும் அணிந்துக் கொண்டு வெண்ணெய் சிலை போல காட்சி தந்துள்ளார் விஜே மகாலட்சுமி.

VJ Mahalakshmi shares Pooja room photos and send Independence day wishes

பெரிய முருகர் சிலை: ரவீந்தர் சந்திரசேகரின் மனைவியும் பிரபல விஜே மற்றும் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தனது வீட்டில் மிகப்பெரிய அளவில் முருகர் சிலை ஒன்றை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். முருகர் சிலைக்கும் மற்ற சாமி படங்கள் மற்றும் சிலைகளுக்கு சாமந்தி மாலைகளை அணிவித்து, விளக்கேற்றி, கையெடுத்துக் கும்பிடும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி.

VJ Mahalakshmi shares Pooja room photos and send Independence day wishes

அழகான பூஜை அறை: விஜே மகாலட்சுமியின் பூஜை அறையில் நடுநாயகமாக தமிழ்க் கடவுள் முருகன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போய் விட்டனர். மேலும், அவரது பூஜை அறை ரொம்பவே அழகாகவும் அத்தனை சாமிகளும் பூஜை அறையில் நிறைந்து இருக்காங்களே என்றும் குத்து விளக்கு, மணி விளக்கு என அனைத்துமே அட்டகாசமாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சுதந்திர தின வாழ்த்து: தேசியக் கொடியுடன் பல சினிமா நடிகைகளும் நடிகர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த நல்ல நாளிலும் இறைவனை வழிபட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை மகாலட்சுமி சொல்லியிருக்காரே என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VJ Mahalakshmi shares Pooja room photos and send Independence day wishes

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X