பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாகும் பிரபல விஜே.. தீயாய் பரவும் குவாரண்டைன் போட்டோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல விஜே வைல்ட் கார்டு என்ட்ரியாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது.

முதலில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர்.

அர்ச்சனா சுச்சி

அர்ச்சனா சுச்சி

முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகியும் ஆர்ஜேவுமான சுச்சியும் பங்கேற்றனர். முதல் வைல்டு கார்டான அர்ச்சனா இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீடிக்க அவருக்கு பின் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்த சுச்சி வெளியேறிவிட்டார்.

சீரியல் நடிகர் ஆசீம்

சீரியல் நடிகர் ஆசீம்

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளதாகவும் இதேபோல் பகல் நிலவு சீரியல் நடிகரான ஆசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

2 வாரங்களுக்கு முன்பே

2 வாரங்களுக்கு முன்பே

இதற்காக ஆசிம், மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை போல தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனை ஆசிம் தரப்பும் உறுதிப்படுத்தியது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் ஆசிம் நுழைவார் என கூறப்பட்டது.

விலகிய ஷிவானி

விலகிய ஷிவானி

ஆனால் அவர் வரவில்லை. பகல் நிலவு சீரியலில் நடித்தப்போது, அவரது ரீல் ஜோடியான ஷிவானி ஆசிமை ஒரு தலையாக காதலித்தார். ஷிவானியின் காதலை ஆசிம் ஏற்காததால் அவர் சீரியலில் இருந்து திடீரென விலகினார்.

பாலாஜியுடன் நெருக்கம்

பாலாஜியுடன் நெருக்கம்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி, பாலாஜியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். பாலாஜியுடன் ஓவர் நெருக்கம் காட்டி வரும் ஷிவானி தங்களுக்குள் இருப்பது நட்புதான் என கூறி வருகிறார்.

ஷிவானியின் ரியாக்ஷன்

ஷிவானியின் ரியாக்ஷன்

ஷிவானிக்கு செக் வைக்கும் வகையில் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்படுவார் என்று கூறப்பட்டது. இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆசிம் உள்ளே வந்தால் ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பிரபல விஜே..

பிரபல விஜே..

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிய வைல்டு கார்ட் என்ட்ரியாக பிரபல விஜே ஒருவர் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜே மகேஸ்வரி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக மறைமுகமாக ஒரு பதிவு செய்துள்ளார்.

ஆச்சரியமான அறிவிப்பு

ஆச்சரியமான அறிவிப்பு

இன்னும் ஒருசில தினங்களில் ஒரு ஆச்சரியமான அறிவிப்பு வெளிவரும் என்று குறிப்பிட்டு ஹோட்டலில் குவாரண்டைனில் உள்ள போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் மகேஸ்வரி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

வைல்டு கார்ம்ட என்ட்ரி

வைல்டு கார்ம்ட என்ட்ரி

இதனால் நாளை அல்லது வரும் வாரங்களில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் என்ட்ரியாக வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மகேஸ்வரியின் பதிவை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போகப் போகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.

முதலில் ஆசிமை அனுப்புங்கள்

முதலில் ஆசிமை அனுப்புங்கள்

இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ள நிலையில் விஜே மகேஸ்வரி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருகிறாரா? அல்லது அஸீம் உள்ளே நுழையப் போகிறாரா என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும். மகேஸ்வரி வரும் தகவலை அறிந்த ரசிகர்கள் முதலில் ஆசிமை அனுப்புங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X