பிக்பாஸ் சீசன் 6..திருமண வாழ்க்கை என் கனவை உடைத்துவிட்டது.. கண்கலங்கிய விஜே மகேஸ்வரி!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டுள்ளார்.

தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய விஜே மகேஸ்வரி கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

16 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள மகேஷ்வரி தனது திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன்

பிக்பாஸ் சீசன்

பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான டாஸ்கள் வழங்கப்படும். இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

விஜே மகேஸ்வரி

விஜே மகேஸ்வரி

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல மகேஸ்வரி கலந்து கொண்டுள்ளார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக தாயுமானவன், புதுக்கவிதை ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். மகேஸ்வரி, இசையருவி, சன் டிவி, சன் மியூசிக் ஆகிய சேனல்களில் தொகுப்பாளரான இவர் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்துள்ளார்.

கனவு களைந்தது

கனவு களைந்தது

இதையடுத்து, மகேஷ்வரி தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை குறித்து நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதில், என் அப்பாவுக்கு என்னை பிடிக்காது என்பதால் என்னையும் அக்காவையும் விட்டு சென்றுவிட்டார். நிறைய பாரங்களை சுமந்து கொண்டு எனது 15வயதில் எனது பயணத்தை தொடங்கினேன். இதையடுத்து, பெரிய கனவுடன் திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால் அந்த கனவு ஒருவருடத்திற்குள் களைந்து விட்டது.

மகன் என் பொக்கிஷம்

மகன் என் பொக்கிஷம்

ஆனால், என் திருமணத்தில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு என் மகன். எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை நான் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் என் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். என் மகனின் படிப்புக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று இப்போது இங்கே வந்து இருக்கிறேன் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X