பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகேஸ்வரி...ரசிகர்களுக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை : பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய விஜே மகேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜே மகேஸ்வரி சன் மியூசிக் சேனல் தொடங்கிய போதே தொகுப்பாளராக அறிமுகமானார்.கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மீடியாவில் விஜேவாக இருந்து இருக்கிறார் மகேஸ்வரி.

இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

விஜே மகேஸ்வரி

விஜே மகேஸ்வரி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளராக வீட்டிற்குள் வந்த மகேஸ்வரி யாருக்கும் பயப்படாமல் வீட்டில் துணிந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். ஆனால், இரண்டாவது வாரத்திலேயே சாந்தியுடன் டேன்ஜர் ஜோனுக்கு சென்ற இவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு சாந்தி வெளியேறினார்.

கதறி அழுதார்

கதறி அழுதார்

இரண்டாவது வாரத்திலேயே குறைந்த வாக்குகளை பெற்று கடைசி வரை டேன்ஜர் ஜோனில் இருந்ததால், அசீம் பெண்களை மரியாதை இல்லாமல் பேசினார். மற்ற போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். ஆனால், அவரை மக்கள் அதிக வோட்டுகள் அளித்து காப்பாற்றி விட்டார்கள். என்னை மக்களுக்கு பிடிக்கவில்லையா? என்றும் அசீமை விட நான் மோசமாக விளையாடுகிறேனா என கேட்டு கதறி அழுதார்.

வருத்தத்தில் மகேஸ்வரி

வருத்தத்தில் மகேஸ்வரி

இதையடுத்து, அடுத்தடுத்த வாரங்களில் இவரின் பெயர் நாமினேஷனுக்கு வந்தாலும், காப்பாற்றப்பட்டு விட்டார். இந்த முறை மகேஸ்வரியை அசீம்,ஏடிகே,விக்ரமன் ஆகியோர் நாமினேட் செய்திருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். கதிரவன், ராம், ராபர்ட் மாஸ்டர் வீட்டில் சும்மாவே சுற்றி வரும் நிலையில் வலுவான போட்டியாளர் வெளியேறியது பிக் பாஸ் பார்வையாளர்களை சற்று கடுப்பாக்கி உள்ளது.

உங்க அன்பு போதும்

உங்க அன்பு போதும்

இந்நிலையில், விஜே மகேஸ்வரி வெளியிட்டுள்ள வீடியோவில்,எனக்கு லவ் கொடுத்த அனைவருக்கும் நன்றி, வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. நான் 100% என்னுடைய விளையாட்டை கொடுத்தேன். வெளியே வந்தவுடன் தான் தெரிகிறது, எனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட், எவ்வளவு லவ் இருக்கிறது என்று. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நான் என்னுடைய கேமை சரியாகத்தான் விளையாடினேன் என்று நினைக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இதேபோல் எனக்கு தொடர்ந்து உங்களுடைய லவ்வை கொடுங்க என்று மகிழ்ச்சியாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X