நகைக்கடையில் நடந்த சண்டை.. சேல்ஸ் கேர்ளை திட்டித் தீர்த்த விஜே மணிமேகலை.. இன்னுமாடா இந்த பிராங்க்?

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜே மணிமேகலை நகைக்கடையில் சேல்ஸ் கேர்ள் ஒருவருடன் சண்டை போட்ட வீடியோ ஒன்று தற்போது தீயாக பரவி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை தொடர்ந்து தனியாக கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் கே பி ஒய் பாலாவுடன் அமெரிக்காவிலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த மணிமேகலை மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாகியுள்ளார்.

Vj Manimegalai and CWC Shrutika Arjun sales girl prank video gets trolled by fans

மணிமேகலை vs சேல்ஸ் கேர்ள்: நடனக் கலைஞர் உசேனை திருமணம் செய்து கொண்ட மணிமேகலை சமீபத்தில் நகைக்கடை ஒன்றுக்கு தனது கணவருடன் சென்ற நிலையில், இங்கே உள்ள அனைத்து நகைகளையும் எனக்கு வாங்கித் தரணும் உனக்கு காசு இருக்கும் அப்படின்னு பிட்டு போடும்போது, ஆசை எல்லாம் யாருக்கு வேணும் முதல்ல காச கொடுத்து நகையை வாங்குங்க என பர்தா அணிந்த சேல்ஸ் கேர்ள் ஒருவர் திடீரென மணிமேகலையை தாக்கிப் பேச அந்த சேல்ஸ் கேர்ள் உடன் மணிமேகலை சண்டை போடும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அச்சச்சோ மணிமேகலைக்கு என்ன ஆச்சு என்றும் ஏன் அந்த சேல்ஸ் கேர்ள் இவ்ளோ ரூடா பேசுறாங்க என்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட் போட்டு வர, அட போங்கடா முடியல சாமி என நெட்டிசன்கள் அந்தப் பர்தா போட்டு சண்டை போடும் சேல்ஸ் கேர்ள் சத்தியமா யாருன்னு உங்களுக்கு தெரியாதா எனக் கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

Vj Manimegalai and CWC Shrutika Arjun sales girl prank video gets trolled by fans

ஸ்ருதிகா அர்ஜுன் பிராங்க்: சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடித்த நடிகை ஸ்ருதிகா தான் என்பது தெளிவா தெரியுது, இதை போய் பிராங்க் என்று ஒரு வீடியோ வேற என மணிமேகலையையும் ஸ்ருதிகாவையும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

பர்தா அணிந்து சேல்ஸ் கேர்ள் போல நடித்தாலும், அவரது கலர் முடி மற்றும் குரலே மண்டை மேல இருக்க கொண்டையை காட்டி விடுகிறதே, இதையெல்லாம் பிராங்க் வீடியோன்னு தூக்கிட்டு வராதீங்க மணிமேகலை என வச்சு செய்து வருகின்றனர். எதையாவது செய்து டிரெண்டாக வேண்டும் என நினைத்த மணிமேகலை இப்படி பல்பு வாங்கி விட்டாரே என பஞ்சர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X