விபத்துக்குள்ளானது மணிமேகலையின் கார்… ப்ளீஸ்… கவனமா இருங்க என்று அட்வைஸ் பண்ணும் ஃபேன்ஸ் !

சென்னை : சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை. இவர், சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.

Recommended Video

Manimegalai Hussain தம்பதிக்கு நடந்த கார் விபத்து | CWC, Mr&Mrs Chinnathirai

தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில நாட்களுக்கு முன் தங்களின் கார் விபத்துக்கு உள்ளானது என்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மணிமேகலை

மணிமேகலை

சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியான வலம் வந்தவர் மணிமேகலை. சிரிக்க சிரிக்க பேசுவது... யாரையும் புன்படுத்தாக நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளினியாக உயர்த்தி உள்ளது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹுசைன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹுசைனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அட்டகாசம்

அட்டகாசம்

இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோ தொடங்கி அனைத்திலும் இவர்களின் ஒற்றுமை, செல்ல சண்டைகள் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. அதே போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த அட்டகாசத்தை மறக்கவே முடியாது. அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கோமாளிகளான புகழ், சிவாங்கி, மணிமேலை, பாலா முக்கியமானவர்களாக இருந்தனர்.

கார் ஆக்சிடென்ட்

இந்நிலையில் மணிமேலை தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில்,கடந்த சில நாட்களுக்கு முன் தங்களது ஹுண்டாய் i20 கார் விபத்துக்கு உள்ளானது என்று கூறியுள்ளார். மேலும், 2021ம் ஆண்டு எப்போ முடியும் என்று இருக்கு என்றார், கால்ல சுடுதண்ணீர் கொட்டுச்சு, இப்போ கார் ஆக்சிடென்ட் ஆகி இருக்கு, சும்மா கார் ஓட்டுலாமேனு எடுத்தேன் அது ஒரு குத்தமா... நல்ல வேளை பெரிய ஆக்சிடேன்ட் இல்லை, சின்னதா போச்சு என்று அந்த வீடியோவில் புலம்பி உள்ளார். மணிமேலை இந்த வீடியோவை ஜாலியாக பதிவிட்டு இருந்தாலும் அவரின் ரசிகர்கள் அவருக்கு டிரைவ் பண்ணும் போது கவனமா இருங்க ப்ளீஸ் என்று அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

பிஎம் டபிள்யு கார்

பிஎம் டபிள்யு கார்

மணிமேகலை விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக பிஎம் டபிள்யு காரை வாங்கி இருந்தனர். அதை தங்கள் சொந்த உழைப்பில் வாங்கி இருப்பதாக கூறி இருந்தனர். இந்த காரில் விலை அரை கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X