அமெரிக்காவில் “நா ரெடி” பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விஜே மணிமேகலை.. விஜய் ரசிகைன்னா சும்மாவா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "நா ரெடி" பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. சுமார் 40 மில்லியன் வியூஸை கடந்து டிரெண்டாகி வரும் அந்த பாடலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ரீல்ஸ் போட்டு வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு ஆங்கரிங் பண்ண கேபிஒய் பாலாவுடன் சென்ற விஜே மணிமேகலை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஜே மணிமேகலை செம சூப்பராக நடனமாடி வெளியிட்டுள்ள அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Vj Manimegalai done a dance reel for Vijays Leo movie Naa Ready song in America

40 மில்லியன் வியூஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

அனிருத் இசையில் உருவான இந்த பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் பாடி உள்ளனர். அதிரடியாக 40 மில்லியன் வியூஸை கடந்து டிரெண்டாகி வரும் இந்த பாடல் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கியது.

சரக்கு, தம், போதை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து லியோ படத்திலும் சரக்கு, தம், போதைப் பொருள் என எல்லை மீறிய காட்சிகள் இடம்பெற்று இளைஞர்களை கெடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு சர்ச்சைகள் கிளம்பின.

நடிகர் விஜய் தம் அடித்தவாறே "நா ரெடி" பாடல் முழுவதும் நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் லிரிக் வீடியோவில் இருந்த நிலையில், இவர் எப்படி தமிழ்நாட்டு இளைஞர்களின் ரோல் மாடலாக மாறுவார் என கேள்விகள் எழுந்தன. ஆனால், ரசிகர்கள் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் விஜய்யின் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் மணிமேகலை போட்ட ஆட்டம்: இந்நிலையில், அமெரிக்காவுக்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க கேபிஒய் பாலா உடன் சென்றுள்ள விஜே மணிமேகலை தற்போது லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "நா ரெடி" தான் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நீங்க மிகப்பெரிய தளபதி ஃபேன் என்பதை நிரூபிச்சிட்டீங்க அக்கா என மணிமேகலையின் ரீல் வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் லைக் போட்டு அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X