நான் தாங்க ஹுசைனை லவ் ஜிகாத் செஞ்சுட்டேன்: விஜே மணிமேகலை கலகல #exclusive

By Siva

Recommended Video

சன் டிவி VJ மணிமேகலை கல்யாண போட்டோக்கள்- வீடியோ

சென்னை: எனக்கு திருமணம் ஆன அன்று தான் லவ் ஜிகாத் பற்றி கேள்விப்பேடன். உடனே ஹுசைனிடம் கேட்டேன். அவர் விளக்கினார். நான் தான் அவரை லவ் ஜிகாத் செய்தேன். அவர் செய்யவில்லை என்று விஜே மணிமேகலை தெரிவித்துள்ளார்.

விஜே மணிமேகலை தனது காதலர் ஹுசைனை பெற்றோர் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார். மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் மணிமேகலை ஒன்இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது,

சிங்கிள்

சிங்கிள்

விஜே பணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. சிங்கிளாக காம்பியரிங் செய்து கொண்டிருந்தேன். திடீர் என்று பார்த்தால் திருமணமாகிவிட்டது. எல்லோரும் கால் பண்ணி வாழ்த்துவது வித்தியாசமாக உள்ளது.

மதம்

மதம்

என் அப்பாவை சமாதானம் செய்து திருமணம் செய்ய திட்டமிட்டோம். வேறு மதம் என்பதால் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். ரொம்ப பிரஷர் வந்துச்சு. வேறு வழியில்லாமல் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது.

பாடல்

பாடல்

காதல் கதை என்று பெருசா எதுவும் கிடையாது. மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் வரும் ஆடலுடன் ரீமிக்ஸ் பாடலுக்கு தனியாக ஒருவன் ஆடுவான்ல அது ஹுசைன் தான். எனக்கு டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். பார்க்க சூப்பரா ஆடுறானே இந்த பையன் யார், என்னன்னு தேடிக் கண்டுபிடிச்சு பாராட்டலாம் என்று அவரின் செல்போன் எண்ணை பெற முயன்றேன்.

பாராட்டு

பாராட்டு

நான் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். தேங்க்யூ தேங்க்யூ என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வச்சுட்டான். அதன் பிறகு மீண்டும் போன் செய்து பேசி பழக்கம் ஏற்பட்டது. ஹுசைன் சென்னை தான். படங்களில் துணை டான்ஸ் மாஸ்டராக உள்ளார்.

டான்ஸ்

டான்ஸ்

தெலுங்கு படங்களில் வேலை செய்கிறார். மார்ச் 5ம் தேதி தான் நம்பர் கிடைச்சு பேசினேன். பாகுபலி படத்தில் துணை டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். மே 4ம் தேதி அவருக்கு பிறந்தநாள், 7ம் தேதி எனக்கு பிறந்தநாள்.

கார் பயணம்

கார் பயணம்

அவர் ஹைதராபாத்தில் இருந்தார். தனியாக காரில் ஹைதராபாத் வரை சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதும் இம்பிரஸ் ஆகிவிட்டான். நான் தான் ப்ரொபோஸ் பண்ணினேன். பசங்க தான் பொண்ணுங்களை தேடி ஊர், ஊராக வருவாங்க. இங்க உல்டாவா நான் ஊர் விட்டு ஊர் போய் தேடிக் கண்டுபிடித்தேன். முதலில் நான் கலாய்க்க கால் பண்ணுகிறேன் என்று நினைத்து தள்ளியே இருந்தார். அதன் பிறகு தான் என்னை நம்பி காதலாச்சு.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

அப்பாவிடம் சொன்னபோது அவர் ஏற்கவில்லை. உடனே எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் இப்படி திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது.

பிரியாணி

பிரியாணி

எனக்கு சமையல் செய்யவே தெரியாது. அவருக்கும் செய்யத் தெரியாது. சமையல் செய்யத் தெரியாது என்று கெத்தாக இருந்தேன். ஆனால் பிரியாணி செய்யத் தெரியலையே என்று இப்போ ஃபீல் பண்ணுகிறேன்.

இன்னொரு அம்மா

இன்னொரு அம்மா

என் மாமியார் தான் சமையல் செய்கிறார். காலையில் எழுந்த உடன் மாமியார் தான் டீ போட்டுக் கொடுக்கிறார். என்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார் என் மாமியார்.

விளக்கம்

விளக்கம்

எனக்கு திருமணம் ஆன அன்று தான் லவ் ஜிகாத் பற்றி கேள்விப்பேடன். உடனே ஹுசைனிடம் கேட்டேன். அவர் விளக்கினார். நான் தான் அவரை லவ் ஜிகாத் செய்தேன். அவர் செய்யவில்லை என்று செம ஜாலியாக பேசினார் மணிமேகலை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X